சவுதியில் ஓய்வு பெறும் வயது உயர்வு..!

Post Views: 45 சவுதி அரேபியாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பணி ஓய்வு பெறும் வயது 60 ஆக இருந்த நிலையில், தற்போது 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட சில பதவிகளுக்கு இதில் நீட்டிப்புச் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விஷன் 2030 … Read more

அமெரிக்கா: காதல் மனைவி முன் இந்தியர் சுட்டு கொலை

Post Views: 62 அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் வசித்து வந்தவர் கவின் தசார். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரை சேர்ந்தவர். மெக்சிகோ நாட்டை சேர்ந்த சிந்தியா என்பவரை காதலித்து கடந்த மாதம் இறுதியில், அவருடன் திருமணம் நடந்தது. வருகிற 29-ந்தேதி மனைவியுடன் கவின் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன், மனைவி சிந்தியா மற்றும் தன்னுடைய சகோதரி தீப்ஷி ஆகியோருடன் வணிக வளாகம் ஒன்றிற்கு பொருட்களை வாங்க சென்றார். இதன்பின் பைக்கில் புதுமண … Read more

உலகம் சுற்றிய வாலிபன்..!

Post Views: 75 7 நாட்களில் 7 உலக அதிசயங்களையும் பார்வையிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் எகிப்தை சேர்ந்த மக்டி ஈசா!இவர் சுமார் 6 நாட்கள், 11 மணிநேரம், 52 நிமிடங்களை எடுத்துக்கொண்டுள்ளார். இதற்காக ஒன்றரை ஆண்டுகளாக திட்டமிட்டு வந்ததாக இவர் தெரிவித்துள்ளார். இவர் தனது பயணம் முழுவதும் பொது போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்

வங்கதேச வன்முறை; 105 பேர் பலி: 778 மாணவர்கள் இந்தியா வந்தனர்.

Post Views: 219 வங்கதேசத்தில் நடந்து வரும் போராட்டத்தால், இதுவரை 105 பேர் உயிரிழந்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால், 778 இந்திய மாணவர்கள் தாயகம் நோக்கி திரும்பினர்.கடந்த 1971ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்கதேசம் தனி நாடாக பிரிந்தது. இந்த போரில் உயிர் தியாகம் செய்தோர் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கு அந்நாட்டு அரசு வேலையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2018ல் நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து இந்த இடஒதுக்கீடு நிறுத்தி … Read more

சீனாவில் பாலம் இடிந்து விழுந்தது: 11 பேர் பலி: 30 பேர் மாயம்

Post Views: 78 சீனாவில் பாலம் ஒன்று இடிந்து விழுந்து, 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் மாயமாகி உள்ளதால், தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.வடமேற்கு சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் கனமழை காரணமாக, ஏற்பட்ட வெள்ளத்தால், மேம்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேம்பாலம் சரிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகினர். 30 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.தண்ணீரில் அடித்து … Read more

ஓமன் கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்: இந்தியர் பிணமாக மீட்பு- 7 பேரின் கதி என்ன?

Post Views: 42 ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து ஏமனின் ஏடன் துறைமுகத்துக்கு ஒரு எண்ணெய் கப்பல் புறப்பட்டது. கொமாரோஸ் நாட்டின் `பிரெஸ்டீஜ் பால்கன்’ என்ற அந்த கப்பலில் 13 இந்தியர்கள் உள்பட 16 பணியாளர்கள் பயணித்தனர். அப்போது ஓமன் கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தூரத்தில் அந்த கப்பல் விபத்துக்குள்ளானது. இதனால் கப்பலில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தனர். மேலும் இந்த விபத்தால் அங்கு எண்ணெய் படலமாக மிதந்தது.இதுகுறித்து … Read more

இன்ஸ்டாகிராமிலேயே முத்தலாக் தெரிவித்த துபாய் இளவரசி..!

Post Views: 7,908 துபாய் இளவரசி ஷைக்கா மஹ்ரா, தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷீத் பின் மனா அல் மக்தூமுக்கு இன்ஸ்டாகிராமில் விவாகரத்து வழங்கினார்.இளவரிசி ஷைக்கா, ஜூலை 16 அன்று வெளியிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், தனது கணவர் மற்ற கம்பனியன்களுடன் பிஸியாக இருப்பதால், அவரை உடனடியாக விவாகரத்து செய்வதாக அறிவித்தார். கூடவே முத்தலாக் முறையில் மூன்று முறை ‘I Divorce You’ எனத்தெரிவித்து, ‘இப்படிக்கு மாஜி மனைவி’ என பதிவிட்டிருந்தார்.இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.ஷைக்கா மஹ்ரா, … Read more

‘தொழில்நுட்ப கோளாறு விரைவில் சீராகும் என நம்புகிறோம்’ – மைக்ரோசாப்ட் நிறுவனம்

Post Views: 51 மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் உலகம் முழுவதும் இன்று முடங்கியது. விண்டோசை பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களின் கம்ப்யூட்டர் திரையில் புளூ ஸ்கிரீன் ஆப் டெத் (Blue Screen of Death) என்ற எரர் தோன்றியது. அதில், ‘உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன்பின்னர், ரீஸ்டார்ட் செய்வோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். … Read more

சீனா: வணிக வளாக தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு..!

Post Views: 48 சீனாவின் மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணத்தில் ஜிங்காங் நகரில் வணிக வளாகம் ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால பணியாளர்கள் ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்டோர் சம்பவ பகுதிக்கு சென்றனர்.அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பலர் சிக்கி கொண்டனர். தீ விபத்தில் கரும்புகை வான்வரை பரவியது. இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. அவர்களில் 30 … Read more

சவுதியில் இருந்து பஹ்ரைன் சென்று விசா ரினீவல் செய்பவர்கள் கவனத்திற்கு..

Post Views: 64 சவுதி அரேபியாவில் விசிட் விசாவில் வந்த பலரும் ஒவ்வொரு மூன்று மாதங்கள் முடியும் போதும், பஹ்ரைன் சென்று வரும்போது அவர்களது விசா மூன்று மாதங்களுக்கு ரினீவல் ஆகிறது. ஆன்லைனில் விசா ரினீவல் செய்யும் பலருக்கும் மூன்று மாதங்கள் கிடைப்பதில்லை என்ற புகார் வருவதால், பலரும் பஹ்ரைன் சென்று வருகின்றனர். இவ்வாறு பஹ்ரைன் செல்பவர்களுக்கு முன்னதாக தரைப்பாலத்திலேயே ஆன்-அர்ரைவல் விசா கிடைத்ததால், அவர்கள் எளிதாக செல்ல முடிந்தது. ஆனால், தற்போது ஆன்-அர்ரைவல் விசா நிறுத்தப்பட்டுள்ளது. … Read more

Exit mobile version