சவுதி அரேபியாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பணி ஓய்வு பெறும் வயது 60 ஆக இருந்த நிலையில், தற்போது 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனாலும், நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட சில பதவிகளுக்கு இதில் நீட்டிப்புச் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது.