சவூதி அரேபியாவில் அநாகரிகமான முறையில் ஷார்ட்ஸ் அணிவது பொது நடத்தையை மீறுவதாகும், அவ்வாறு விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு 500 சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்படும். மேலும் பொது அலங்காரக் குறியீடு எண் 2019ன் படி அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த குறியீட்டின் படி பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் பொதுவெளியில் முறையற்ற ஆடைகள் அணிவது, புகைப்படம், குறியீடு, வசனங்கள் உள்ளிட்டவை சவூதி அரேபிய அரசின் விதிமுறைகளின் படி தண்டனைக்குரிய குற்றமாகும் அவ்வாறான செய்களில் ஈடுபடுவோருக்கு 200 சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்படும்.
அநாகரீகமான ஷார்ட்ஸ் என்றால் என்ன?
அறிக்கையை தெளிவுபடுத்திய பத்ர் அல் ஜயானி சவுதி பப்ளிக் டெகோரம் சொசைட்டி முன்னாள் தலைவராக இருந்தவர். பொதுவில் முழங்காலுக்கு மேல் இருக்கும் ஷார்ட்ஸ் அணிவது அநாகரீகமாக கருதப்படுவதாக ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார், மேலும் கால்பந்து விளையாடுவதற்கான ஷார்ட்ஸ், கூடைப்பந்து, நடைபயிற்சி, நீச்சல் போன்றவை மக்களுக்கு தேவை அணிவது நல்லது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் குறிய பத்ர் அல் ஜயானி குறிப்பிட்ட அந்த விளையாட்டை விளையாடும் போது மட்டும் அவர்கள் அதை பயன்படுத்துவது நல்லது என்றும், மால், பூங்காக்கள், மசூதிகள் போன்ற இடங்களில் அவ்வாறான ஷார்ட்ஸ்களை தவிர்க்கவேண்டும் எனவும் கூறினார்.

மேலும் பொதுவெளி என்பது கடற்கரை போன்றது அல்ல கண்டிப்பாக ஆடை குறியீடு(Dressing Code) இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் இதுபோன்ற பயனுள்ள பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்கள் Gulf tube tamil / WhatsApp Groupல் (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) இணைத்து கொள்ளுங்கள்..