வங்கதேச வன்முறை; 105 பேர் பலி: 778 மாணவர்கள் இந்தியா வந்தனர்.

Post Views: 8,631 வங்கதேசத்தில் நடந்து வரும் போராட்டத்தால், இதுவரை 105 பேர் உயிரிழந்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால், 778 இந்திய மாணவர்கள் தாயகம் நோக்கி திரும்பினர்.கடந்த 1971ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்கதேசம் தனி நாடாக பிரிந்தது. இந்த போரில் உயிர் தியாகம் செய்தோர் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கு அந்நாட்டு அரசு வேலையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2018ல் நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து இந்த இடஒதுக்கீடு நிறுத்தி … Read more

வங்காளதேசத்தில் கரைபுரண்டு ஓடும் ஆறுகள்.. 20 லட்சம் மக்கள் பாதிப்பு!

Post Views: 133 வங்காளதேசத்தில் கோடைகாலத்தில் பெய்யும் பருவமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக அதிகப்படியான சீரற்ற மழைப்பொழிவு ஏற்படுகிறது. இமயமலை மலைகளில் பனிப்பாறைகள் உருகி வெள்ளம் ஏற்படுகிறது. இந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரைகளில் வசிக்கும் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து … Read more

வங்காளதேசத்தில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்: 14 பேர் உயிரிழப்பு

Post Views: 105 வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து குல்னாவுக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. மகுரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்