Breaking: சவுதி அரேபியாவில் நிலநடுக்கம்



சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியான அல்பாஹாவின் மேற்கு பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 9.34 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்பாஹாவின் தெற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp குரூப்பில் (https://bit.ly/3SWGrZk) இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment