பாகிஸ்தானில் 6 நாட்களுக்கு சமூக வலைதளங்களுக்கு தடை..!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், வரும் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை ‘யு டியூப், வாட்ஸாப்’ உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் வரும் 17ம் தேதி முஹரம் ஆஷுரா கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில் வரும் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் தலைமையிலான அரசு இதனை அறிவித்துள்ளது.

இது தொடர்பான பரிந்துரையை அந்நாட்டில் மத்தியில் உள்ள ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசிடம் முன் வைக்கப்பட்டுள்ளது.’வன்முறையை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக வெறுப்பு பேச்சு மற்றும் தவறான கருத்து, தகவல் பகிரப்படுவது தடுக்கப்படும்’ என, பஞ்சாப் மாகாண அரசு தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் பொதுத்தேர்தலின் போது, தேர்தல் முடிவுகளை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பிரபல சமூக வலைதளமான ‘எக்ஸ்’ பக்கத்துக்கு அந்நாட்டு அரசு கடந்த பிப்ரவரி முதல் தடை விதித்துள்ளது.

Leave a Comment

Exit mobile version