இந்திய சிறுவனுக்கு துபாய் போலீஸ் பாராட்டு..!
துபாய்: துபாயில் சுற்றுலா பயணி தவறவிட்ட கைக்கடிகாரத்தை போலீசிடம் ஒப்படைத்த இந்திய சிறுவனுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் முகமது அயன் யூனிஸ், தந்தையுடன் துபாயில் வசித்து வருகிறார். தந்தையுடன் வெளியே சென்ற போது, விலை உயர்ந்த வாட்ச் ஒன்று கீழே கிடந்த வாட்சை பார்த்த சிறுவன் அதை எடுத்து துபாயின் ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேசன் இணையதள முகவரியில் பதிவு செய்தார்.
இதனை பார்த்த போலீசார் வாட்சை பெற்றுக் கொண்டனர். தொடர் விசாரணையில் துபாய்க்கு சுற்றுலா வந்தவருக்கு சொந்தமானது என்றும், சுற்றுலா வந்த இடத்தில் தொலைத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் அந்த வாட்ச் ஒப்படைக்கப்பட்டது.இதனையடுத்து சிறுவனை பாராட்டிய போலீஸ் அதிகாரிகள், சான்றிதழ் வழங்கினர்.
1 comment