பத்தே நிமிடம்.. 28000 அடி சரிந்து அப்படியே யூடர்ன் போட்ட விமானம்! அடுத்து பகீர்.. வெலவெலத்த பயணிகள்

வாஷிங்டன்: நடுவானில் பறந்து கொண்டிருக்கும் விமானம் வெறும் 10 நிமிடத்தில் சடசடவென 28,000 அடி சரிந்துள்ளது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் பதறிப்போனார்கள். விமானத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.

சரிந்த விமானம்: அமெரிக்காவில் இருக்கும் முக்கிய ஏர்லைன்ஸ்களில் ஒன்று யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம். இந்த விமானம் தான் வெறும் 10 நிமிடத்தில் 28,000 அடி சரிந்துள்ளது. மேலும், திடீரென வந்த வழியிலேயே திரும்பியுள்ளது. மேலும் 10 நிமிடத்தில் அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவத்தால் உள்ளே இருந்த பயணிகள் மிரண்டு போனார்கள்.

அந்த விமானம் நியூயார்க்கில் இருந்து ரோம் நகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது தான் திடீரென விமானம் மளமளவெனச் சரிந்து, நியூ ஜெர்சி நோக்கித் திரும்பியுள்ளது. விமானத்தின் கேபின் அழுத்தத்தில் சிக்கல் ஏற்பட்டதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

2 thoughts on “பத்தே நிமிடம்.. 28000 அடி சரிந்து அப்படியே யூடர்ன் போட்ட விமானம்! அடுத்து பகீர்.. வெலவெலத்த பயணிகள்”

Leave a Comment

Exit mobile version