திடீரென பயங்கரமாக வெடித்த சாலை… மயிரிழையில் உயிர் தப்பிய நபர்: கமெராவில் சிக்கிய காட்சி

தென்னாப்பிரிக்க நகரம் ஒன்றில், திடீரென சாலை ஒன்று வெடித்துச் சிதறியதில், ஒருவர் பலியானார், 48 பேர் காயமடைந்தனர்.

மயிரிழையில் உயிர் தப்பிய நபர்

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் திடீரென சாலை ஒன்று பயங்கரமாக வெடித்தது. சாலை வெடித்ததில் சாலையில் வரிசையாக நின்ற வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன.

அப்போது மினி பஸ் ஒன்று தூக்கி வீசப்பட, சரியாக அதனருகே நின்றுகொண்டிருந்த ஒருவர் சட்டென விலகியதால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளது.

accident-1 திடீரென பயங்கரமாக வெடித்த சாலை... மயிரிழையில் உயிர் தப்பிய நபர்: கமெராவில் சிக்கிய காட்சி

ஒருவர் பலி, 48 பேர் காயம்

என்றாலும், எல்லாரும் உயிர் தப்பிய அந்த நபரைப்போல அதிர்ஷ்டசாலிகளாக இருக்கவில்லை. ஆம், அந்த விபத்தில் ஒருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கார்களுக்குள் சிக்கிக்கொண்டவர்கள், காயம்பட்டவர்கள் என 48 பேருக்கு சிகிச்சை தேவைப்பட்டுள்ளது.

தனால் இந்த விபத்து ஏற்பட்டது என தெரியாத நிலையில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

1 thought on “திடீரென பயங்கரமாக வெடித்த சாலை… மயிரிழையில் உயிர் தப்பிய நபர்: கமெராவில் சிக்கிய காட்சி”

Leave a Comment