Last Updated on: 22nd July 2023, 06:53 pm
உடலின் வெப்பம் அதிகமானால் நிறைய செரிமான பாதிப்புகளை உண்டாக்கும். அவற்றைத் தடுத்து உடல் சூட்டைக் குறைத்து குளிர்ச்சியாக்க சில ஆரோக்கியமான பானங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
கொய்யா இலை டீ
கொய்யா இலை டீ உடலை உடனடியாக குளிர்ச்சியடையச் செய்து உடலுக்குத் தேவையான ஆற்றல் உண்டாகும்.
கரும்பு ஜூஸ்
கரும்புச் சாறுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் உடல் சூடு தணியும்.
கிவி ஸ்மூத்தி
கிவி உடல் சூட்டைத் தணிக்கும். அதனால் இதை ஸ்மூத்தியாக சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
பிளாக் டீ
பால் சேர்க்காத பிளாக் டீ எடுத்துக் கொள்வதும் ஓரளவு கணிசமான அளவில் பிளாக் டீ எடுத்துக் கொள்ளலாம்.
தர்பூசணி – தேங்காய் பால்
தேங்காய் மற்றும் வாட்டர்மெலன் இரண்டையும் சேர்த்து பானமாக குடிப்பது உடலுக்கு நிறைய ஆற்றல் கிடைக்கும். உடல சூடும் தணிந்து குளிர்ச்சியடையும்.
வெள்ளரிக்காய் சாறு
வெள்ளரிக்காயை ஜூஸாக அடித்து எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் உடல் சூடு குறையும்.
இஞ்சி சாறு
இஞ்சியை சாறெடுத்து 2 ஸ்பூன் சேர்த்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடல் சூடு தணிவதோடு உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
மோர்
உடலுக்கு குளிர்ச்சி தரும் சிறந்த பானம் மோர். நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்து உடல் எடையை கட்டுப்படுத்துகிறது.