WhatsApp-ல் அதிகமாக போட்டோ அனுப்புபவரா நீங்கள்? அப்போ இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க!
ஆண்ட்ராய்டு சாதனங்களில் பைல்களை ஷேர் செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள Nearby Share அம்சம் இப்போது வாட்ஸ் அப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் whatsapp தளத்தை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். என்னதான் வாட்ஸ் அப் தளம் போலவே பல தளங்கள் உருவாக்கப்பட்டாலும், இன்றளவும் whatsappபிற்கு இருக்கும் மவுசு குறையவில்லை. ஏனெனில் இதற்கு மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு பிரபலத்தன்மையும் நம்பிக்கையும் உள்ளது.
இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்கு அருகே இருக்கும் வாட்ஸ் அப் நண்பர்களுக்கு புகைப்படங்களை மிகவும் வேகமாக ஷேர் செய்ய முடியும். இந்த அம்சம் தற்போது வாட்ஸ் அப் புதிய அப்டேட்டில் பீட்டா பயனர்களுக்கு கிடைக்கிறது. இதை நீங்கள் பயன்படுத்த, உங்கள் சாதனத்தை ஆட்டினாலே போதும் உடனே ஆக்டிவேட் ஆகிவிடும். மேலும் இதன் மூலம் பகிரப்படும் கோப்புகள் அனைத்தும் End to End Encryption செய்யப்படும் என்பதால், மிகவும் பாதுகாப்பானது என சொல்லப்படுகிறது. எனவே இந்த புதிய அம்சத்தால் வாட்ஸ் அப் பயனர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
15 comments