ரியாத்தில் செப் 28-ல் சர்வதேச புத்தகக் கண்காட்சி.

Post Views: 126 ரியாத் சர்வதேச புத்தகக்கண்காட்சி 2023, செப்டம்பர் 28ல் துவங்கி அக்டோபர் 7 வரை நடைபெற இருக்கிறது. கிங் சவுத் பல்கலைகழக வளாகத்தின் புதிய தலைமையகத்தில் சுமார் 46,000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. அரபு உலகின் மிகப்பெரிய கண்காட்சியாக இது திகழும் என கருதப்படுகிறது. 1 மில்லியனுக்கும் அதிகமானோர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்காட்சியை ஒட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. bookfair #internationalbookfair #riyadhbookfair … Read more

இந்தியா வருகிறார் முகம்மது பின் சல்மான்

Post Views: 90 இந்தியாவில் வைத்து இந்த மாதம் 9,10 தியதிகளில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சவுதியின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகம்மது பின் சல்மான் இந்தியா வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 11ஆம் தியதி அன்று பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 11ஆம் தியதி அன்றே அவர் மீண்டும் சவுதி திரும்புகிறார். பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பின்பு முகம்மது பின் சல்மான் இந்தியா வருவது முதல்முறையாகும்.

விமானம் தாமதமா? 750 ரியால் இழப்பீடு கிடைக்கும்

Post Views: 276 புதிய விமான சேவை விதிகளின் படி, பயணிகளுக்கு அதிகப்படியான பயனளிக்கும் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 6 மணி நேரம் தாமதமானால், 750 ரியால் இழப்பீடு, ஹோட்டல் அறை, உணவு, போக்குவரத்து உள்ளிட்டவை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்கேஜ் தொலைந்து போனாலோ, சேதமடைந்தாலோ, கிடைக்க தாமதமானாலோ, பயணிக்கு 6568 ரியால்கள் இழப்பீடு கிடைக்கும். புதிய திருத்தப்பட்ட சட்டம் நவம்பர் 23 முதல் அமுலுக்கு வருகிறது.

தொழிலாளிகளின் பாஸ்போர்ட் முதலாளிகள் கைப்பற்றக்கூடாது

Post Views: 80 சவுதிஅரேபியாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் இக்காமா, பாஸ்போர்ட் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை நிறுவனங்களோ, முதலாளியோ தங்கள் கைவசம் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஒரு தொழிலாளிக்கு 1000 ரியால் அடிப்படையில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், வேலை ஒப்பந்தம் அல்லது அனுமதி இல்லாமல் தொழிலாளிகளை வேலைக்கு அனுமதித்தால் ஒரு தொழிலாளிக்கு 5000 முதல் 10000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சவுதிகளின் குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்தியது அரசு

Post Views: 574 தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் சவுதி குடிமக்களின் குறைந்த பட்ச சம்பளத்தின் அளவை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உயர்த்தியுள்ளது. ஏற்கனவே 3200 ரியால்கள் என இருந்த குறைந்த பட்ச சம்பளம் இந்த மாதம் முதல் 4000 ஆக உயர்ந்துள்ளது.இந்த சம்பள உயர்வு அமுல்படுத்தப்பட்டால் மட்டுமே, சவுதி அரசு வழங்கும் பயிற்சி கட்டணத்தின் சலுகைத்தொகை திரும்ப கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதிஅரேபியாவில் தொழிலாளிகளின் இக்காமா, பாஸ்போர்ட் போன்றவைகளை முதலாளிகள் கைப்பற்றினால் அபராதம்!!

Post Views: 765 சவுதிஅரேபியாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் இக்காமா, பாஸ்போர்ட் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை நிறுவனங்களோ, முதலாளியோ தங்கள் கைவசம் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஒரு தொழிலாளிக்கு 1000 ரியால் அடிப்படையில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், வேலை ஒப்பந்தம் அல்லது அனுமதி இல்லாமல் தொழிலாளிகளை வேலைக்கு அனுமதித்தால் ஒரு தொழிலாளிக்கு 5000 முதல் 10000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. saudilabourlaw #saudimol #sauditamilnews

பள்ளி மாணவர்கள் 20 நாட்கள் லீவு எடுத்தால் பெற்றோருக்கு சிறை: சவுதியில் புதிய சட்டம்

Post Views: 70 ரியாத்: தகுந்த காரணங்கள் இன்றி மாணவர்கள் 20 நாட்கள் அல்லது அதற்கு மேல் பள்ளிக்கு வராமல் இருந்தால் மாணவர்களின் பெற்றொர் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று சவுதி அரசாங்கம் எச்சரித்துள்ளது. சவுதி அரேபியாவின் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வரும் கல்வியாண்டில் ஒரு புதிய கட்டுப்பாட்டை அந்நாட்டு அரசாங்கம் அமல்படுத்துகிறது. அதன்படி, ஒரு மாணவர் முறையான காரணங்கள் எதுவுமின்றி 20 அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் அந்த மாணவரின் … Read more

இனி சவுதி எண்ணிலிருந்தும் UPI பணபரிமாற்றம் செய்துகொள்ளலாம்!!

Post Views: 67 வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அவர்கள் வசிக்கும் நாடுகளில் பயன்படுத்தப்படும் மொபைல் எண்களை பயன்படுத்தி பணபரிமாற்ற வசதியை மேற்கொள்ளும் வகையில் UPI மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் இந்திய மொபைல் எண்களை மட்டுமே பயன்படுத்தி வந்த வெளிநாட்டினர், இனி அவர்களது வெளிநாட்டு எண்களை பயன்படுத்த முடியும். சவுதி அரேபியா தவிர, கத்தார், ஓமன், யுஏஇ ஆகிய நாடுகளுக்கும் இந்த வசதி பொருந்தும்.

உலக அளவில் முன்னிலை: வெளிநாட்டவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் சவுதி அரேபியா

Post Views: 55 ரியாத்: உலகிலேயே வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் சவுதி அரேபியா முன்னிலையில் இருப்பதாக இசிஏ இண்டர்நேஷனல் கன்சல்டன்ஸி நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் பலரிடம் உள்ளது. பெரும்பாலும் அதிக சம்பளம் வழங்கும் நாடுகளுக்கு செல்லவே போட்டி அதிகமாக உள்ளது. அதிக சம்பளம் என்று ஆசைப்பட்டு தவறான ஏஜென்சிகள் மூலம் பலர் வெளிநாடு சென்று ஏமாந்துவிடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சவுதி … Read more

வெளிநாட்டவர்களுக்கும் உம்ரா அனுமதியை வழங்க தொடங்கியுள்ள சவூதி அரேபியா..!!

Post Views: 54 சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், வரவிருக்கும் புதிய உம்ரா சீசனுக்காக நாட்டிற்கு வெளியில் இருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களைப் வரவேற்கத் தொடங்கியுள்ளதாக கடந்த புதன்கிழமை சவுதி பிரஸ் ஏஜென்சி (SPA) தெரிவித்துள்ளது. இதையொட்டி வான்வழிப் போக்குவரத்து, சாலை போக்குவரத்து மற்றும் கடல் துறைமுகங்கள் வழியாக வரும் அனைவரையும் வரவேற்பதற்கு ஏற்ற வண்ணம் ஏற்பாடுகள் தயாராக இருப்பதாக கூறியுள்ளது. இந்த வருடத்திற்கான ஹஜ் சீசன் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் … Read more

Exit mobile version