திடீரென குலுங்கிய தைவான்.. நடுங்கிப்போன மக்கள்! 6.1 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Post Views: 59 தைவான் ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் அமைந்துள்ளதால் அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று. இந்த ரிங் ஆப் பையர் பகுதியில் நிலநடுக்கம் மட்டுமின்றி எரிமலைகள் சூழ்ந்து இருப்பதால் அதன் வெடிப்புகளும் அடிக்கடி ஏற்படும். இதனிடையே இப்போது அங்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. தைவானின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆகப் பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் 171 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த … Read more

Energy Drinks மற்றும் கோலா பானங்கள் பாதுகாப்பானவை

Post Views: 70 சவுதி அரேபியாவில் விற்பனை செய்யப்படும் Energy Drinks மற்றும் கோலாக்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பானவைகள் என சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பொதுவாக இனிப்பு பானங்களை அதிகமாக உட்கொள்வதால், அவற்றில் சர்க்கரை சேர்க்கப்படுவதால், பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

சவுதி உணவகங்களில் வேலை பார்க்கும் உழியர்களுக்கு புதிய விதிமுறை:மீறினால் அபராதம்!

Post Views: 299 உணவகங்கள் உள்ளிட்ட பொது நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களின் தனிப்பட்ட சுகாதாரம் தொடர்பான மீறல்கள் மற்றும் அபராதங்களை நகர்ப்புற வீட்டுவசதி அமைச்சகம் புதுப்பித்துள்ளது. திருத்தப்பட்ட விதிகளின்படி, தனிப்பட்ட சுகாதாரத்தை கடைபிடிக்காத தொழிலாளர்களுக்கு 200 ரியால் முதல் 1000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். நிறுவனங்கள் செயல்படும் பகுதிகளை ஐந்து வகைகளாகப் பிரித்து அபராதங்களும் வேறுபடுத்தப்பட்டுள்ளன. வகை 1 முதல் 5 வரையிலான நிறுவனங்களுக்கு தனிப்பட்ட சுகாதாரம் இல்லாததால் 200, 400, 600, 300 மற்றும் … Read more

கோல்டன் விசாவைப் பெற்ற தமிழக செஸ் வீரர் யார் தெரியுமா?

Post Views: 111 அமீரகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 12) அன்று புகழ்பெற்ற இந்திய செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், துபாய் அவரது இரண்டாவது அதிகாரப்பூர்வ இல்லமாக மாறியுள்ளது. இது குறித்து கூறுகையில் “அமீரக கோல்டன் விசாவைப் பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூயிஸ் ஃபிகோ, நோவக் ஜோகோவிச் மற்றும் பால் போக்பா போன்ற உலகளாவிய விளையாட்டு ஜாம்பாவன்களின் பட்டியலில் ஒருவராக இடம்பிடித்ததில் நான் மிகவும் … Read more

பிரிட்டன் அரசு – டாடா ஸ்டீல் இடையே ரூ.12,800 கோடி மதிப்பில் ஒப்பந்தம்:

Post Views: 67 பிரிட்டன் அரசு மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனம் இடையே 1.25 பில்லியன் பவுண்ட் (ரூ.12,800 கோடி) முதலீட்டு ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது.பிரிட்டனின் சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் போர்ட் டால்போல்ட் பகுதியில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 8,000 பேர் பணியாற்றி வருகின்றனர். கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க அந்த ஆலையை நவீனப்படுத்த வேண்டிய சூழலில் டாடா ஸ்டீல் நிறுவனம் உள்ளது. இதற்காக அந்நிறுவனம் பிரிட்டன் … Read more

பத்தே நிமிடம்.. 28000 அடி சரிந்து அப்படியே யூடர்ன் போட்ட விமானம்! அடுத்து பகீர்.. வெலவெலத்த பயணிகள்

Post Views: 37 வாஷிங்டன்: நடுவானில் பறந்து கொண்டிருக்கும் விமானம் வெறும் 10 நிமிடத்தில் சடசடவென 28,000 அடி சரிந்துள்ளது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் பதறிப்போனார்கள். விமானத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம். சரிந்த விமானம்: அமெரிக்காவில் இருக்கும் முக்கிய ஏர்லைன்ஸ்களில் ஒன்று யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம். இந்த விமானம் தான் வெறும் 10 நிமிடத்தில் 28,000 அடி சரிந்துள்ளது. மேலும், திடீரென வந்த வழியிலேயே திரும்பியுள்ளது. மேலும் 10 நிமிடத்தில் அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவத்தால் … Read more

உலகின் பெஸ்ட் 100 நிறுவனங்கள்! லிஸ்டில் இடம் பெற்ற ஒரே இந்திய கம்பெனி! அடடே இதை யாரும் எதிர்பார்க்கல

Post Views: 61 டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் டாப் 100 நிறுவனங்களுக்கான பட்டியலில் இந்தியாவில் இருந்து வெறும் ஒரு நிறுவனம் மட்டுமே இடம் பிடித்துள்ளது. அது எந்த கம்பெனி என்பது குறித்துப் பார்க்கலாம். டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் குறித்த பட்டியலை வெளியிடும். அதன்படி இந்தாண்டும் டைம் நிறுவனமான ஆன்லைன் டேட்டா பிளாட்ஃபார்ம் ஸ்டேடிஸ்டா என்ற நிறுவனத்துடன் இணைந்து 2023ஆம் ஆண்டின் உலகின் டாப் 100 நிறுவனங்கள் குறித்த பட்டியலை … Read more

பயனர்களுக்கு தெரியாமல் லொகேஷனை டிராக் செய்த கூகுள்: ரூ.7,000 கோடி அபராதம் விதிப்பு!

Post Views: 267 கலிபோர்னியா: பயனர்களுக்கு தெரியாமல் இருப்பிடம் (லொகேஷன்) குறித்த விவரங்களை சேகரித்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.7,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் தாக்கல் செய்த வழக்கில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக கூகுள் நிறுவனம் பயனர்களின் இருப்பிடம் சார்ந்த விவரங்களை சேகரிப்பது வழக்கம். அதற்கு பயனர்கள் லொகேஷன் அம்சத்தை ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் பல்வேறு சேவைகளை பயனர்கள் பெற முடியும். இருப்பினும் பிரைவசி உட்பட பல்வேறு காரணங்களுக்காக … Read more

தனிநபர் தகவல்களை பரிமாறுவது கிரிமினல் குற்றம்!

Post Views: 99 சவுதி அமைச்சரவையில் 2021-இல் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் தகவல்கள் பாதுகாப்புச் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்தது. இதன்படி, பொது இடங்கள், விருந்து நிகழ்ச்சிகள், கூட்டங்கள் ஆகிய இடங்களில் எடுக்கப்படும் தனிநபர்களின் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ வெளியிடுவது குற்றமாகும். மேலும், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் சேகரிக்கப்படும் தனிநபர் விபரங்களை பிறருக்கு விற்பதோ, பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவது உள்ளிட்டவை கடுமையான அபராதத்திற்குரிய குற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருளாதார புலி! சிங்கப்பூர் அதிபராகும் தமிழர்.. யார் இந்த தர்மன் சண்முகரத்தினம்? இன்று பதவியேற்பு

Post Views: 58 சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டின் 9ஆவது அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வான நிலையில், அவர் இன்றைய தினம் அந்நாட்டின் அதிபராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்கிறார். தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் குட்டி நாடு சிங்கப்பூர். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே கூட 60 லட்சத்திற்குள்ளாகவே இருக்கும். மேலும், தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் இது இருக்கிறது. சிங்கப்பூரின் அதிபராக இருந்த ஹலீமா யாக்கோப் நிறைவடையும் நிலையில், புதிய அதிபர் தேர்வு செய்ய கடந்த வாரம் … Read more

Exit mobile version