பிரிட்டன் அரசு – டாடா ஸ்டீல் இடையே ரூ.12,800 கோடி மதிப்பில் ஒப்பந்தம்:

பிரிட்டன் அரசு மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனம் இடையே 1.25 பில்லியன் பவுண்ட் (ரூ.12,800 கோடி) முதலீட்டு ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது.பிரிட்டனின் சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் போர்ட் டால்போல்ட் பகுதியில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 8,000 பேர் பணியாற்றி வருகின்றனர். கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க அந்த ஆலையை நவீனப்படுத்த வேண்டிய சூழலில் டாடா ஸ்டீல் நிறுவனம் உள்ளது. இதற்காக அந்நிறுவனம் பிரிட்டன் அரசின் நிதி உதவியை கோரியது.

இந்நிலையில், பிரிட்டன் அரசு மற்றும் டாடா ஸ்டீல் இடையே ரூ.12,800 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, ரூ.5,100 கோடியை பிரிட்டன் அரசும் மீதத் தொகையை டாடா ஸ்டீல் நிறுவனமும் முதலீடு செய்யும்.

1 thought on “பிரிட்டன் அரசு – டாடா ஸ்டீல் இடையே ரூ.12,800 கோடி மதிப்பில் ஒப்பந்தம்:”

Leave a Comment

Exit mobile version