பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை: ரூ.300-ஐ கடந்த பெட்ரோல், டீசல் விலை

Post Views: 325 கராச்சி: வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை ரூ.300ஐ தாண்டியுள்ளது. தற்போது அங்கு பெட்ரோல் ரூ.305.56-க்கும், டீசல் ரூ.311.54-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பாகிஸ்தான் காபந்து பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் தலைமையிலான அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.14.91 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.18.44 உயர்த்தியது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.305.56-க்கும், டீசல் ரூ.311.54-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் … Read more

சிங்கப்பூருக்கு மட்டும் அரிசி ஏற்றுமதிக்கு ஓகே சொன்ன இந்தியா… என்ன காரணம் தெரியுமா?

Post Views: 52 கடந்த ஜூலை மாதம் பாஸ்மதி அல்லாத பச்சை அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. சமீப காலமாக அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யவும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. இந்நிலையில் கடந்த வாரம் மத்திய அரசு புழுங்கல் அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி விதித்தது. ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட … Read more

தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபராகிறார் – முழு விவரம்

Post Views: 63 சிங்கப்பூர்: தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபராக பதவியேற்க உள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் வரும் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ம்தேதி நடைபெற்றது. தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66), இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மூன்று வேட்பாளர்களும் … Read more

ஜோகன்னஸ்பர்க் நகரில் பயங்கர தீ விபத்து – 73 பேர் உயிரிழப்பு

Post Views: 71 தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 73 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ஐந்து அடுக்கு கட்டிடம் ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியதில் உள்ளே இருந்தவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. இந்த தீ விபத்தில் இதுவரை 73 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். … Read more

3 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்வு: வெளிநாட்டில் சிக்கிய குடிமக்களுக்கு வட கொரியா மீண்டும் அழைப்பு

Post Views: 183 கரோனா பரவலால் வெளிநாடுகளில் சிக்கிய வட கொரிய குடிமக்கள் நாடு திரும்ப விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தளர்த்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் கடும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை விதித்தன. ஏறக்குறைய ஓராண்டு காலம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புக்குள்ளானது. கரோனா பரவத் தொடங்கிய காலகட்டத்தில் வட கொரிய அரசு தனது நாட்டின் … Read more

சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ளா, சாந்தனு நாரயண்… | சர்வதேச நிறுவனங்களின் சிஇஓ.வாக அதிகளவில் இந்தியர்கள்: எலான் மஸ்க் வியப்பு

Post Views: 80 கலிபோர்னியா: கூகுள், மைக்ரோசாஃப்ட் உட்பட சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது அதிகரித்து வருகிறது. இதை பார்த்து எலான் மஸ்க் வியந்துள்ளார்.சர்வதேச நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகிக்கும் இந்தியர்களின் பட்டியல் ஒன்று எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) பகிரப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் வியப்பைத் தருவதாக எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சத்ய நாதெள்ளா, யூடியூப் நிறுவனத்தில் நீல் மோகன், அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாரயண் … Read more

3.2 லட்சம் கோடி அதிகரித்த சொத்து மதிப்பு! மிரள வைத்த நஹத் வுயங்…

Post Views: 95 வியட்நாம்: வியட்நாமை சேர்ந்த பாம் நஹத் வுயங் என்பவரின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 255% அதிகரித்துள்ள நிலையில், அவர் அந்நாட்டின் டாப் பணக்காரராக உருமாறியுள்ளார். இங்கு பொதுமக்கள் ஒவ்வொரு ரூபாயை சம்பாதிக்கவே பெரும் போராட்டமாக இருக்கிறது. ஆனால், பெரும் பணக்காரர்களுக்கு அப்படி இல்லை.. அவர்களால் பல கோடி ரூபாயை அசால்டாக சம்பாதிக்க முடிகிறது. பங்குகள்: இதற்கிடையே வியட்நாம் நாட்டை சேர்ந்த மின்சார வாகன உற்பத்தியாளரின் பங்குகள் பட்டியலிட்ட முதல் நாளே 255% உயர்ந்துள்ளது. … Read more

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியதாக அறிவிப்பு

Post Views: 68 ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ராஸ்காமோஸ், வோஸ்டோக்னி காஸ்மோட்ரோம் ஏவுதளத்திலிருந்து லூனா-25 என்ற விண்கலத்தை சோயுஸ் 2.1பி ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா சார்பில் முதல் முறையாக நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் இதுவே. இந்த விண்கலம் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாகவே நிலவின் தென் … Read more

பர்கர் கிங் நிறுவனத்தில் 27 ஆண்டுகள் விடுப்பின்றி பணியாற்றிய ஊழியருக்கு பொதுமக்கள் திரட்டிய நிதி…

Post Views: 60 வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், மியாமி டேட் கவுன்டியை தலைமையிடமாகக் கொண்டு பர்கர் கிங் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் சுமார் 20,000 ஓட்டல்கள் உள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 265 ஓட்டல்கள் செயல்படுகின்றன. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள பர்கர் கிங் ஓட்டலில் கெவின் போர்டு (54) என்பவர் பணியாற்றினார். இவர் கடந்த 27 ஆண்டுகளில் ஒருநாள்கூட விடுப்பு எடுக்கவில்லை. இதற்காக பர்கர் கிங் நிறுவனம் … Read more

பாகிஸ்தானில் 1 லிட்டர் பெட்ரோல் விலை இவ்வளவா?

Post Views: 65 இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 14-ம் தேதி அன்வர் உல் ஹக் ககர் இடைக்கால பிரதமராக, நியமிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது.தற்போது பாகிஸ்தானில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.290, டீசல் ரூ.293 உள்ளது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. எரிபொருள் மட்டுமல்லாது, தக்காளி, … Read more

Exit mobile version