அமீரகத்தில் குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை.. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. இந்த மாதம் எரிபொருள் விலையானது முன்னர் இருந்த விலையை விட ஏற்ற இறக்கங்களை கொண்டிருந்த நிலையில் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலையானது சற்று குறைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் குழுவின் ஏப்ரல் மாத விலைப்பட்டியலின் படி, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 3.01 திர்ஹம்சாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை மார்ச் மாதத்தில் 3.09 திர்ஹம்சாக இருந்தது.

அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 2.90 திர்ஹம்சாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை மார்ச் மாதம் 2.97 திர்ஹம்சாக இருந்தது.

மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 2.82 திர்ஹம்சாக குறைக்கப்பட்டுள்ளது. இது 2.90 திர்ஹம்சாக மார்ச் மாதத்தில் இருந்தது.

அதே சமயம் மார்ச் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 3.14 திர்ஹம்சாக இருந்து வந்த டீசல் விலையானது ஏப்ரல் மாத விலை பட்டியலில் 3.03 திர்ஹம்சாக குறைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Previous post

தொழுகை காலங்களில் தாறுமாறாக வாகனங்களை பார்க்கிங் செய்தால் 500 திர்ஹம் அபராதம்!! அபுதாபி காவல்துறை எச்சரிக்கை!

Next post

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி உள்ளிட்ட நாடுகள் திடீர் முடிவு..எரிபொருள் விலை உயர வாய்ப்பு?

Post Comment

You May Have Missed