Last Updated on: 3rd April 2023, 02:56 pm
வாஷிங்டன்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் தேவை உயரும் என்றும் இதனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. எனினும், அதையும் மீறி உற்பத்தியை குறைப்பதாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அறிவித்துள்ளன. உலக அளவில் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது கச்சா எண்ணெய். கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டால் பெட்ரோல், டீசல் விலை உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் அபாயம் இருக்கிறது. இதனால், நாடுகளில் பொருளாதார அளவிலும் இது கடுமையாக எதிரொலிக்கும்.
உற்பத்தியை குறைக்க முடிவு
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் தேவை உயரும் என்றும் இதனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 13 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த ஒபெக் + கூட்டமைப்பில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள நாடான சவுதி அரேபியா , தினசரி க்ச்சா எண்ணெய் உற்பத்தியை 5 லட்சம் பீப்பாய்களாக குறைக்க முடிவு செய்துள்ளது.
5 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே
ரஷ்யா – உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்திற்கு மத்தியில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்த நிலையிலும் அதையும் மீறி உற்பத்தியை குறைக்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது. வரும் மே மாதம் முதல் நடப்பு ஆண்டு இறுதி வரை தினமும் 5 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய இருப்பதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.
10.23 லட்சம் பீப்பாயாக குறைய உள்ளது
ஒபெக் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றன. இதன்படி, ஈரான் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை 2,11,000 ஆகவும் குவைத் 1,28,000 பீப்பாய் ஆகவும் ஓமன் 40 ஆயிரம் மற்றும் யூஏஇ 1.44 லட்சம் பிப்பாய் ஆகவும் குறைக்க முடிவு செய்துள்ளது. ஓபெக் நாடுகளின் இந்த முடிவால், இந்தக் கூட்டமைப்பில் இருந்து பெறப்படும் கச்சா எண்னெய் அளவு 10.23 லட்சம் பீப்பாயாக குறைய உள்ளது.
இதுவே முதல் முறையாகும்
ரஷ்யாவும் கச்ச எண்ணெய் உற்பத்தியை குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 5 லட்சம் பீப்பாய்களாக குறைக்க இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் மார்க்கெட்டில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு ஆதரவாக இந்த உற்பத்தி குறைப்பை மேற்கொண்டுள்ளதாக சவுதி அரேபியா எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் தேவை உயரும்
பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரிக்க கூடும் என்று உலக நடுகள் கவலை தெரிவித்த நிலையிலும் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் தேவை உயரும் என்றும் இதனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை உயரும்?
எனினும், அதையும் மீறி உற்பத்தியை குறைப்பதாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அறிவித்துள்ளன. கச்சா எண்ணய் உற்பத்தி குறைப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.