இந்தியாவில் இருந்து கொண்டே அமீரக லைசென்ஸை புதுப்பித்துக் கொள்ள முடியுமா என்ற ஒரு நபரின் கேள்விக்கு துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA) தனது சமூக ஊடக பக்கத்தில் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளது.
அவர் ட்விட்டர் பதிவில், “நான் இந்தியாவில் இருந்து எனது அமீரக டிரைவிங் லைசன்ஸை ரினியூவல் செய்ய விரும்புகிறேன்” என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு RTA விளக்கமளித்து தெளிவுபடுத்தியுள்ளது.
அதன்படி, அமீரக குடியிருப்பாளர்கள் அவர்களது லைசன்ஸ்களை ரினியூவல் செய்ய விரும்பினால் நாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஆணையம் அவரின் கேள்விக்கு பதிலளித்து வெளியிட்டுள்ள பதிவில், “எங்களைத் தொடர்புகொண்டதற்கு நன்றி. உங்களின் ஓட்டுநர் லைசன்ஸை ரினியூவல் செய்ய அமீரகத்தில் உள்ள RTA- வினால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்டிகல் மையங்களில் சரியான Emirates ID மற்றும் செல்லுபடியாகும் கண் பரிசோதனையுடன் அமீரகத்தில் இருப்பது கட்டாயம் என்பதை தயவுசெய்து கவனிக்கவும்” என்று தெரிவித்துள்ளது. அத்துடன் காலாவதி தேதிக்குப் பின்னர் லைசன்ஸை ரினியூவல் செய்ய தவறினால் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதம் பற்றியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லைசென்ஸ் புதுப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள்:
- 21 வயதுக்கு குறைவான வாடிக்கையாளர்களுக்கு செல்லுபடியாகும் அசல் எமிரேட்ஸ் ஐடி தேவைப்படும்.
- 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு செல்லுபடியாகும் அசல் எமிரேட்ஸ் ஐடியுடன் கண் பரிசோதனை அவசியம்.
- இராஜதந்திரிகளுக்கு (Diplomats) வெளியுறவு அமைச்சகத்தின் கடிதத்துடன் அசல் எமிரேட்ஸ் ஐடி அல்லது எமிரேட்ஸ் ஐடிக்கு பதிலாக தூதரகங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கான இராஜதந்திர கார்டு (diplomatic card) போன்றவை முக்கியம்.
- குடும்ப புத்தககம் இல்லாமல் எமிராட்டி பாஸ்போர்ட் (மர்சூம்) வைத்திருப்பவர்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டின் நகலுடன் சரியான மர்சூமின் நகலை வைத்திருந்தால் ரினியூவல் செய்ய முடியும்.
- எமிராட்டி பெண்களின் மகன்கள் மற்றும் எமிராட்டி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பாஸ்போர்ட்டின் நகலுடன் வாடிக்கையாளரின் தாய் எமிராட்டி என்று குறிப்பிடும் ரெசிடன்சி மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தின் கடிதத்தின் நகலை கொண்டு செல்ல வேண்டும்.
RTA இணையதளத்தில் விண்ணப்பிக்கும் படிகள்:
>> அங்கீகரிப்பட்ட ஆப்டிக்கல் மையங்களில் மின்னணு கண் பரிசோதனையை மேற்கொண்டு பின்னர், சர்வீஸ் பிரிவில் உங்கள் எமிரேட்ஸ் ஐடி அல்லது ஓட்டுநர் உரிம விவரங்களை உள்ளிட்டால், தரவு தானாகவே மீட்டெடுக்கப்படும்.
>> அதன்பிறகு, வாடிக்கையாளரின் தொலைபேசி எண்ணுக்கு OTP அனுப்படும். ‘Renewing a Driving Licence’ என்பதை தேர்வு செய்யவும். நிலுவையில் உள்ள அபராதம் மற்றும் கட்டணங்களை கிரெடிட் கார்டு மூலம் செலுத்திய பின்னர் மின்னஞ்சல் மூலம் தற்காலிக ஓட்டுநர் லைசன்ஸைப் பெறலாம்.
>> தேரா அல்லது அல் பர்ஷாவில் உள்ள வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் மூலமாகவோ விநியோகச் சேவையின் மூலமாகவோ பெற்றுக் கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல், RTA ஸ்மார்ட் ஆப், சுய சேவை இயந்திரங்கள், கண் பரிசோதனை மையங்கள் மற்றும் மொபைல் கண் பரிசோதனை டிரக்குகள் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் லைசன்ஸ் விண்ணப்பிப்பதற்கு வசூல் செய்யப்படும் சேவைக்கட்டணம் மற்றும் லைசன்சைப் பெறுவதற்கான விநியோகக் கட்டணம் பற்றிய விவரமும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
டெலிவரி கட்டணம்:
- நிலையான டெலிவரி: 20 திர்ஹம்
- அதே நாள் டெலிவரி: 35 திர்ஹம்
- 2 மணி நேரத்திற்குள் டெலிவரி: 50 திர்ஹம்
- சர்வதேச டெலிவரி: 50 திர்ஹம்
சேவை கட்டணம்:
>> 21 வயதுக்கு குறைவான நபர்களிடம் டிரைவிங் லைசன்ஸ் ரினியூவல் செய்வதற்கு 100 திர்ஹம்களும், knowledge and innovation கட்டணம் போன்றவற்றிற்கு 20 திர்ஹம்களும் அத்துடன் கூடுதலாக கண் பரிசோதனை மற்றும் உரிமம் புதுப்பித்தலுக்கு மொபைல் டிரக் சேவையை கோரும் போது 500 திர்ஹம்களும் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
>> 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரினியூவலுக்கு 300 திர்ஹம்களும் knowledge and innovation 20 திர்ஹம்களும்மற்றும் கண் பரிசோதனை மற்றும் உரிமம் புதுப்பித்தலுக்கு மொபைல் டிரக் சேவையை கோரும் போது கூடுதலாக 500 திர்ஹம்களும் சேவைக் கட்டணமாக செலுத்தக் கூடும்.
>> அதேசமயம், உரிமம் 10 ஆண்டுகளுக்கு மேல் காலாவதியாகி இருந்தால், அவ்வப்போது புதுப்பித்தல் கட்டணத்தை செலுத்தி, மதிப்பீட்டு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, 10 ஆண்டுகளுக்கும் மேலாக லைசன்ஸ் புதுப்பிக்கப்படாமல் இருந்தால் மதிப்பீட்டு சோதனைக்கு வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
>> பயிற்சி கோப்பு திறப்பு கட்டணமாக (training file opening fees) 200 திர்ஹம்களும், கற்றல் விண்ணப்பக் கட்டணமாக (earning application fees)100 திர்ஹம்களும், கையேடு கட்டணமாக (handbook manual fees) 50 திர்ஹம்களும், RTA சோதனைக் கட்டணமாக (delay fees in renewing the driving licence) 200 திர்ஹம்களும், தாமதமாக டிரைவிங் லைசென்ஸ் ரினியூவல் செய்தால் 500 திர்ஹம்களும், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் கட்டணமாக (driving licence renewal fee) 300 திர்ஹம்களும் மற்றும் அறிவு மற்றும் கண்டுபிடிப்பு கட்டணமாக (Knowledge and Innovation fees) 20 திர்ஹம்களும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
order generic amoxil – order amoxil pills amoxicillin brand
diflucan 200mg brand – https://gpdifluca.com/ forcan order online
buy cenforce 100mg pill – https://cenforcers.com/ order cenforce 100mg without prescription
cialis samples – https://ciltadgn.com/# mambo 36 tadalafil 20 mg reviews
how long does cialis take to work 10mg – cialis brand no prescription 365 cialis max dose
purchase ranitidine pills – https://aranitidine.com/# ranitidine 150mg oral
buy viagra toronto – https://strongvpls.com/# viagra sale cheap
This is the kind of content I get high on reading. este sitio
Good blog you possess here.. It’s obdurate to on great quality belles-lettres like yours these days. I really respect individuals like you! Rent guardianship!! https://buyfastonl.com/
This is the kind of post I recoup helpful. https://ursxdol.com/get-cialis-professional/
With thanks. Loads of conception! https://prohnrg.com/product/metoprolol-25-mg-tablets/
I’ll certainly bring to skim more. https://aranitidine.com/fr/levitra_francaise/
I couldn’t weather commenting. Profoundly written! https://sportavesti.ru/forums/users/euboh-2/