அமீரகத்திற்கு 3 நாள் அரசுமுறை
பயணமாக வந்துள்ள இந்திய
வெளியுறவுத் துறை அமைச்சர்
எஸ்.ஜெய்சங்கர், அபுதாபியில்
கட்டப்பட்டு வரும் முதல் கோவில்
பணிகளைப் பார்வையிட்டுள்ளார்.
இது குறித்து, அமீரகத்திலுள்ள
இந்திய தூதரகம் ட்விட்டரில்
வெளியிட்ட பதிவில்
கூறப்பட்டுள்ளதாவது: வெளியுறவு
அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின்
அமீரக சுற்றுப்பயணத்தின்போது
அபுதாபியில் நாராயணன் கோயில்
கட்டுமானப் பணிகளை அவர்
பார்வையிட்டார். கோயில்
கட்டுவதற்காக இந்தியர்கள்
மேற்கொண்ட முயற்சிகளை
பாராட்டிய அவர், அமைதி,
சகிப்புத்தன்மை மற்றும்
நல்லிணக்கத்தின் அடையாளமாக
இக்கோயில் திகழும் என
குறிப்பிட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சுமார் 55,000 சதுர மீட்டர் நிலத்தில்
அமையவிருக்கும் இந்த
கோயிலில், இந்திய சிற்பக்
கலைஞர்கள் மூலம் கல்
வேலைப்பாடுகள்
நடைபெறவுள்ளன. மேலும் தனது
இந்தப் பயணத்தின்போது, ஐக்கிய
அரபு அமீரகத்தின் வெளியுறவு
அமைச்சர் ஷேக் அப்துல்லா பின்
சையதுடன் இருதரப்பு உறவுகள்
குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp குரூப்பில் (https://bit.ly/3SWGrZk) இணைத்து கொள்ளுங்கள்.