ஆஸ்திரேலியா அரசு ஒரு அற்புதமான உரிமை சட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறது.இது ஆபீஸ் நேரத்தை தாண்டி, தங்கள் முதலாளிகளிடமிருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களை ஊழியர்கள் புறக்கணிக்க அனுமதிக்கும்.இந்த சட்டம் ஆளும் தொழிலாளர் கட்சியின் தொழில்துறை உறவுகள் சட்டத்த்தின் மேம்படுத்தப்பட்ட ஒரு அம்சமாக கருதப்படுகிறது.மேற்கத்திய நாடுகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஆஸ்திரேலியாவும் ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை உண்டாக்க முயற்சிகள் எடுத்து வருகிறது.இந்த சட்டத்தின் மூலம், வேலை நேரம் தாண்டி, தொடர்பு கொள்ளநேரும் போது, ஊழியர்கள் முதலில் தங்கள் முதலாளியிடம் பேசி சிக்கலை தீர்க்கலாம். தொடரும் பட்சத்தில், அவர்கள் அதை ஃபேர் ஒர்க் கமிஷனில் முறையிடலாம். இணங்காத முதலாளிகளுக்கு $18,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.