மியான்மர் எல்லையில் மோதல் உச்சகட்டம்; எல்லை மாநிலங்களில் தீவிர கண்காணிப்பு!

Post Views: 188 டாக்கா: வங்கதேசம்- மியான்மர் அரசுக்கு எதிராக போர் நடத்தி வரும் கிளர்ச்சிப் படையினர், வங்கதேச எல்லைப் பகுதி முழுவதையும் கைப்பற்றி விட்டனர். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் கண்காணிப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நம் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெவ்வேறு கிளர்ச்சி படையினர் போர் நடத்தி வருகின்றனர். இந்தியா, வங்கதேச எல்லையில் அமைந்துள்ள ராக்கைன் மாநிலத்தில் கணிசமான நிலப்பரப்பை, அரக்கன் ராணுவம் எனப்படும் கிளர்ச்சிப்படை கைப்பற்றி … Read more

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் எரிசக்தி கட்டமைப்பு மீது ஏவுகணை வீச்சு!

Post Views: 68 கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல்களில், அந்நாட்டு எரிசக்தி கட்டமைப்புகள் சேதமடைந்து முக்கிய நகரங்களில் மின்தடை ஏற்பட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. இரு தரப்பும் பேச்சில் ஈடுபட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்கிறது. இந்த … Read more

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்!

Post Views: 105 இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜெருசலேம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. … Read more

அதிகரிக்கும் பதற்றம்: இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தும் ஹிஸ்புல்லா!

Post Views: 135 இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனவே ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக லெபனானிலும் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது. இவ்வாறு ஒரே நேரத்தில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் போரிட்டு வருகிறது. முன்னதாக ஹிஸ்புல்லாக்களுக்கு … Read more

அமெரிக்காவில் இந்திய மாணவரை அடித்து நொறுக்கிய கும்பல்: அமைச்சர் ஜெய்சங்கரிடம் உதவி கோரி கடிதம்!

Post Views: 105 அமெரிக்காவின் சிகாகோவில் இந்திய மாணவர் ஒருவரை ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்கி அவரது செல்போனை கொள்ளையடித்துச் சென்றனர்.இந்நிலையில், இந்திய அரசு தலையிட்டு அவருக்கு முறையான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஹைதராபாத்தை சேர்ந்த சையது மசாஹிர் அலி, சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.பிப்ரவரி 4 அன்று, அவரது வெஸ்ட் ரிட்ஜ் குடியிருப்பின் அருகே ஆயுதமேந்திய கொள்ளையர்களால் அவர் … Read more