இலங்கை: சீனாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள் கடன் பொறியில் சிக்க வைக்கப் போகிறதா?!

Post Views: 423 இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அதிகாரப்பூர்வ சீன விஜயத்தில், இலங்கைக்கு பாரிய நேரடி முதலீடுகள் கிடைத்துள்ளன. சீன அதிபர் ஷி ஜினபிங்குக்கும் இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் ஜனவரி 16ஆம் தேதி நடந்த சந்திப்பை அடுத்தே இந்த முதலீடுகள் தொடர்பான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஹம்பாந்தோட்டையில் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு, … Read more

டிரம்ப், ரஷ்யா, ஐரோப்பா: சீனா முன்னுள்ள 5 சவால்களையும் அதிபர் ஜின்பிங் சமாளிப்பாரா?!

Post Views: 201 கடந்த 2024ஆம் ஆண்டு சீனாவுக்கு கடினமான ஆண்டாக அமைந்தது. ஒருபுறம், சீனாவின் ஷி ஜின்பிங் அரசாங்கம் நாட்டில் பொருளாதாரப் பிரச்னைகளைச் சந்தித்தது. மறுபுறம், ரஷ்யாவுடனான கூட்டணி காரணமாக சர்வதேச அளவில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க வேண்டியிருந்தது. இருப்பினும், உலகப் பொருளாதாரத்தில் சீனா தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், 2025ஆம் ஆண்டில் சீனா முன்னுள்ள 5 முக்கிய சவால்கள் என்ன? இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்.

உலகெங்கும் மெல்ல நடக்கும் மாற்றம்.. சத்தமே இல்லாமல் சீனா செய்யும் செயல்! இது பெரிய பிரச்சினை தான்!

Post Views: 289 பெய்ஜிங்: க்ரீன் எனர்ஜி மற்றும் டேட்டா பிராசஸிங் சென்டர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் சில குறிப்பிட்ட கனிமங்களுக்கான தேவை பயங்கரமாக அதிகரித்துள்ளது. இதை வைத்து இப்போது பக்காவாக காய் நகர்த்தும் சீனா, வரும் காலத்தில் உலகையே தனது கட்டுக்குள் வைத்திருக்கக் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது. இந்த நவீன காலகட்டத்தில் எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்து நகர்ந்து வருகிறது. உலகம் இப்படி ஸ்மார்ட் கருவிகளைக் கொண்டதாக மாறும் சூழலில், இதற்கான எனர்ஜி தேவையும் … Read more

சீனாவின் திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் பலி!

Post Views: 99 சீனாவின் திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் (01:00 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய … Read more

சீனாவில் பூனைகளுக்கும் வந்தது கொரோனா!!

Post Views: 137 பெய்ஜிங்: சீனாவில் வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை அதற்கு கொடுத்து வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று, உலக நாடுகளை புரட்டி போட்டது. இதன் பாதிப்பு முழுமையாக விலக 2 அல்லது 3 ஆண்டுகள் வரை ஆனது. ஐந்தாண்டுக்கு பின், தற்போது சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி வருகிறது. ‘ஹியூமன் மெடாநிமோ வைரஸ்’ என்ற, எச்.எம்.பி.வி., தொற்று, … Read more

நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட பாறை! ஆராய்ச்சியில் அசத்தும் சீனா!

Post Views: 74 Chang’e-6 விண்கலம் அனுப்பிய பாறைகள் சுமார் 280 கோடி ஆண்டுகள் பழமையான எரிமலை பாறைகளின் துண்டுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட 420 கோடி ஆண்டுகள் பழமையான பாறைகள் மூலம், அதன் தென் அரைக்கோளப்பகுதியில் எரிமலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து பல விண்கலன்களை அனுப்பி நிலவுடன் அண்மைக்காலமாகவே மிக நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி வருகிறது சீனா. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட Chang’e-4 … Read more

சீனாவில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

Post Views: 93 மத்திய சீனாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சாங்ஷா, மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சாங்ஜியாஜி நகரின் சாங்ஜி கவுண்டியில் உள்ள 5 மாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. … Read more

சீனாவில் கூட்டத்துக்குள் தாறுமாறாக காரை ஓட்டியதில் 35 பேர் பலி, 43 பேர் காயம்!

Post Views: 105 பெய்ஜிங்: சீனாவின் ஜுஹாய் நகரில் 62 வயது முதியவர் ஒருவர், மக்கள் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதில் 35 பேர் உயிரிழந்தனர்; 43 பேர் காயமடைந்தனர். காரை ஓட்டிச் சென்ற முதியவர் ஃபான் என்று அடையாளம் காணப்பட்டது. விவாகரத்தான அவர் பெய்ஜிங் நகரில் இருந்து 2,200 கி.மீ தொலைவில் உள்ள ஜுஹாய் நகரத்தில் உள்ள ஒரு விளையாட்டு மையத்தில் திங்கள்கிழமை இரவு 7.48 மணிக்கு பொதுமக்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது காரை ஓட்டிச் … Read more

சீனாவில் நிகழ்ந்த அதிசயம்.. இரு கருப்பைகள் கொண்ட பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்… மருத்துவர்கள் ஆச்சரியம்!

Post Views: 100 வடமேற்கு சீனாவில் பெண் ஒருவர், தனது இரு கருப்பைகள் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த அரிய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு அரிய மருத்துவ நிகழ்வு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.கருப்பை டிடெல்ஃபிஸ் (uterus didelphys) எனப்படும் இந்த நிலை உலகளவில் 0.3% பெண்களுக்கு மட்டுமே ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். வடமேற்கு சீனாவில், ‘லி’ என்ற குடும்பப்பெயர் கொண்ட அந்த பெண், எட்டரை மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ​​செப்டம்பர் மாத … Read more

சீனாவில் பெய்த கனமழையில் சிக்கி 11 பேர் பலி..!

Post Views: 53 வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது. மேலும், கனமழையால் 100 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கனமழையால் ஹுலுடாவ் நகரத்திற்கு குறிப்பாக ஜியான்ஜாங் மற்றும் சுய்சோங் மாகாணங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. சாலைகள், … Read more