வீட்டு வாடகை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வழி மட்டுமே!
சவுதி அரேபியாவில், ஜனவரி 15 முதல் வீட்டு வாடகை செலுத்துவது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் மட்டுமே செல்லுபடியாகும் என ஈஜார் தெரிவித்துள்ளது. அல்லது ஈஜார் அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் செலுத்தப்படும் எந்த தொகையும் வாடகை செலுத்தியதற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படாது எனவும் ஈஜார் தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் வழியாக வாடகை ஒப்பந்தத்தை பயனாளர் ஆவணப்படுத்த வேண்டும் எனவும், பின்னர் வாடகை செலுத்துவது ஆன்லைன் வழியாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நிபந்தனை வணிக நிறுவனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
2 comments