கஃபாவின் புதிய பொறுப்பாளரிடம் சாவி ஒப்படைப்பு..!

சவுதி அரேபியாவில் புனித கஃபாவின் புதிய பொறுப்பாளரான ஷேக் அப்துல் வஹாப் பின் ஜைனுல் ஆபிதீன் அல் ஷைபி அவர்களிடம் கஃபாவின் சாவி ஒப்படைக்கப்பட்டது. ஏற்கனவே பொறுப்பாளராக இருந்த ஷேக் ஷாலிஹ் அல் ஷைபி அவர்களின் மரணத்தை தொடர்ந்து புதிய பொறுப்பாளரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது.

இந்த பணி புனிதம் நிறைந்த ஒன்றாகும். இதனை சிறப்பாக செய்ய இறைவன் எனக்கு அருள் புரிவானாக. சவுதி ஆட்சியாளர்களின் மேற்பார்வையில் இந்த பணி தொடரும் என அவர் தெரிவித்தார். மக்கா வெற்றியைத் தொடர்ந்து முகம்மது நபி(ஸல்) அவர்கள் ஷைபி குடும்பத்தாரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தது இன்று வரை தொடர்கிறது.

13 thoughts on “கஃபாவின் புதிய பொறுப்பாளரிடம் சாவி ஒப்படைப்பு..!”

Leave a Comment

Exit mobile version