இந்தியா – சவுதி அரேபியா இடையே ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது..!
இந்திய சிறுபான்மையினர் அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்பிக் அல் ரபியா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1,75,025 யாத்ரீகர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும்.
ஜித்தா வந்த சிறுபான்மை விவகார அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையிலான குழு, சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்பிக் அல் ரபியாவை சந்தித்தது. இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் மற்றும் சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் அவுசப் சையத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பின் பின்னர், ஜித்தாவிலுள்ள சவூதி ஹஜ்-உம்ரா அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டது. ஹஜ் தொடர்பான இந்தியாவின் சிறந்த டிஜிட்டல் சேவைகளை சவுதி பிரதிநிதிகள் பாராட்டினர். மெஹ்ரம் இல்லாமல் ஹஜ்ஜுக்கு செல்லும் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் திட்டங்கள் மற்றும் யாத்ரீகர்களின் ஒட்டுமொத்த நலனை உறுதி செய்யும் வகையில் சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
2 comments