எதிரி நாட்டுக்கு அனுதாபம்: நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு தைவான் உதவி
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட எதிரி நாடான சீனாவுக்கு தைவான் உதவி செய்ய முன்வந்துள்ளது.நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து, Taiwan ஜனாதிபதி சாய் இங்-வென் (Tsai Ing-wen), Chinaவுக்கு உதவ முன்வந்துள்ளார்.
இன்று (செவ்வாக்கிழமை), தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் சமூக ஊடக தளமான X மூலம் சீனாவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.மேலும் அவரது பதிவில், ”பாதிக்கப்பட்ட அனைவரும் அவர்களுக்குத் தேவையான உதவியைப் பெற விரும்புகிறோம், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறோம். பேரிடர் மீட்பு முயற்சியில் உதவி வழங்க தைவான் தயாராக உள்ளது” சாய் இங்-வென் குறிப்பிட்டார்.
ஜனநாயக ரீதியில் ஆளப்படும் தீவு நாடான தைவான் மற்றும் சீனா இடையே பதட்டங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்கின்றன. சீனா அதன் அரசியல் மற்றும் இராணுவ அழுத்தங்கள் மூலம் தனது இறையாண்மையை தைவான் மீது நிலைநாட்ட முயல்கிறது.ஆனால் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த சீன மக்கள் அனைவருக்கும் சாய் இங்-வென் தனது ‘இதயப்பூர்வமான இரங்கலை’ தெரிவித்தார்.
தைவானின் தீயணைப்புத் துறையினர் 160 பேர், நான்கு நாய்கள் மற்றும் 13 டன் பொருட்கள் சீனாவுக்குச் செல்லத் தயாராக இருப்பதாகக் கூறியது.எந்தவொரு வெளிநாட்டு மீட்புக் குழுக்களையும் அனுமதிக்குமா என்று சீனா கூறவில்லை. கடந்த ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு தைவான் ஜனாதிபதி முன்பு சீனாவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.
7 comments