14.6 C
Munich
Saturday, October 12, 2024

குவைத் நாட்டின் புதிய மன்னர் ஷேக் மிஷால் அல் அகமதுக்கு காத்திருக்கும் சவால்கள்!

குவைத் நாட்டின் புதிய மன்னர் ஷேக் மிஷால் அல் அகமதுக்கு காத்திருக்கும் சவால்கள்!

Last Updated on: 19th December 2023, 08:24 pm

குவைத் நாட்டின் புதிய மன்னராக ஷேக் மிஷால் அல் அகமது அல் சபா பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு வயது 83. வளைகுடாவில் உள்ள அரபு நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அலுவலகத்தை கொண்டிருக்கும் ஒரே நாடாக குவைத் திகழ்கிறது. இதில் மன்னராலும் சிலர் நியமிக்கப்படுவர். இந்நிலையில் புதிய மன்னரின் கீழ் நியமிக்கப்பட உள்ள அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அமைச்சர்களில் புதியவர்கள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை நிலவுகிறது.

புதிய மன்னர் கையில் முக்கிய பொறுப்பு

அருகிலுள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இளைஞர்கள் கைகளில் ஆட்சி பொறுப்பையே கொடுத்துள்ளனர். ஆனால் குவைத்தில் மூத்தவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மாற்றம் வர வேண்டும் என்ற கோரிக்கையை புதிய மன்னர் ஷேக் மிஷால் அல் அகமது நிறைவேற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குவைத் அரசில் நிலவி வரும் மற்றொரு முக்கியமான பிரச்சினை மோதல் போக்கு.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும், மன்னரால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளுக்கும் இடையிலான மோதல் என்பது தொடர் கதையாகி வருகிறது. இதனால் பல்வேறு கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. புதிய சட்டங்களை இயற்றுவது, நிதி ஒதுக்கீடு, புதிய முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் நிலவுகின்றன. இத்தகைய பிரச்சினைக்கு புதிய மன்னர் ஷேக் மிஷால் அல் அகமது தீர்வு காண்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது.

ராஜினாமாவில் முடியும் சண்டை

னெனில் அவ்வளவு எளிதில் முடியக் கூடிய பிரச்சினை இல்லை. ஏதேனும் ஒருபுறம் நெருக்கடி கொடுத்தால் மறுபுறம் பதவி விலகும் படலங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்து விடுகின்றன. எனவே சற்று கவனமாக தான் விஷயத்தை கையாள வேண்டியுள்ளது. OPEC இணையதளத்தில் உள்ள தகவலின்படி, அதன் உறுப்பு நாடுகளில் 8 சதவீதம் எண்ணெய் வளத்தை கொண்டுள்ளது குவைத்.

எனவே தங்களிடமுள்ள எண்ணெய் வளத்தை கொண்டு சரியான முறையில் வர்த்தகம் செய்வதற்கு OPEC உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. இதை கருத்தில் கொண்டு வெளியுறவுக் கொள்கையை சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். அந்த வகையில் சவுதி அரேபியா உடன் இணக்கமான போக்கை புதிய மன்னர் கடைப்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.சீனா உடன் இணக்கம்சமீபத்தில் ஈரான், சவுதி அரேபியா உடன் சீனா மிகவும் முக்கியமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்மூலம் வளைகுடாவில் சீனாவின் செல்வாக்கு சற்று அதிகரித்திருப்பதாக பார்க்கப்படுகிறது. எனவே குவைத் நாடும் சீனா உடன் தனது உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்புள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் புதிய மன்னர் எந்தவித சிக்கலும் இன்றி ஈடுபடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here