சுனிதாவை மீட்க எலான் மஸ்க்கின் ‛‛ஸ்பேஸ் எக்ஸை” நாடும் நாசா

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புஜ் வில்மோர் ஆகிய இருவரும் 2025 பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவர் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உதவியுடன் அவர்களை மீட்டுவர நாசா நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோருடன் இணைந்து கடந்த ஜூன் 5ம் தேதி விண்வெளிக்கு ஆய்வுக்கு சென்றனர். திட்டமிட்டபடி பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்பும் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. 2025 பிப்ரவரி மாதம் வரை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்திலேயே இருக்க வேண்டியிருக்கும் என நாசா அறிவித்துள்ளது.

இந்நிலையில் க்ரோ-9 (Crew 9” ) என்ற திட்டத்தின் கீழ், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செப்டம்பர் மாதம் 2 பேர் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் குழு உதவியுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் , புஜ் வில்மோரை பூமிக்கு மீட்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 thoughts on “சுனிதாவை மீட்க எலான் மஸ்க்கின் ‛‛ஸ்பேஸ் எக்ஸை” நாடும் நாசா”

Leave a Comment

Exit mobile version