மாணவர் விசாவில் இனி குடும்பத்தினருக்கு அனுமதியில்லை – விதிகளை கடுமையாக்கிய இங்கிலாந்து

இங்கிலாந்தில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் விசாவில் இனி தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மாணவர் விசாவை பயன்படுத்தி பலர் இங்கிலாந்தில் வேறு பணிகளுக்காக நுழைவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விசா கட்டுப்பாடுகள் இந்த மாதம் முதல் அமலுக்கு வரும் எனவும், இதன் மூலம் இங்கிலாந்துக்கு சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரின் வருகை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே சமயம், இந்த விதியில் இருந்து முதுகலை ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 thought on “மாணவர் விசாவில் இனி குடும்பத்தினருக்கு அனுமதியில்லை – விதிகளை கடுமையாக்கிய இங்கிலாந்து”

Leave a Comment

Exit mobile version