சிங்கப்பூர் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்: பயணி பலி, 30 பேர் காயம்..!
பாங்காக்: லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம், தீவிர காற்று சுழற்சி காரணமாக மேகங்களில் உரசியதால் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணி ஒருவர் உயிரிழந்தார், 30 பேர் காயமடைந்தனர்.பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து 211 பயணிகள், 18 ஊழியர்களுடன் சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 777 -300 இஆர் விமானம் சிங்கப்பூர் சென்று கொண்டு இருந்தது.
வழியில் தீவிர காற்று சுழற்சி காரணமாக மேகங்களில் உரசியது. இதனால் அந்த விமானம் அவசரமாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.காற்று சுழற்சி காரணமாக விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்துள்ளனர்.
5 comments