அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அல்பாரெட்டா பகுதியில் நடந்த கார் விபத்தில் அமெரிக்க வாழ் இந்திய மாணவர்கள் ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தின்போது காரில் இருந்த ரித்வாக் சோமேபல்லி மற்றும் முகமது லியாகாத் ஆகிய 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த ஷ்ரியா அவர்சாலா மற்றும் அன்வி சர்மா ஆகிய இருவரும் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்து வந்துள்ளனர். அதே போல் ஆர்யன் ஷர்மா, அங்குள்ள ஆல்பாரெட்டா உயர்நிலைப்பள்ளியில் சீனியர் வகுப்பில் படித்து வந்துள்ளார். அந்த பள்ளியின் கிரிக்கெட் அணியிலும் அவர் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rattling fantastic info can be found on blog.Blog range