உலக தர வரிசையில் சவுதி ஏர்லைன்ஸ் முதலிடம்..!

சவுதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனமான சவுதி ஏர்லைன்ஸ், ஜூன் மாதத்தில் விமானங்களை சரியான நேரத்தில் இயக்குவதில் 88.22 சதவிகிதம் எட்டியுள்ளதால், உலகளாவிய விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளதாக விமானங்களின் கண்காணிப்பு நிறுவனமான CIRIUM தெரிவித்துள்ளது.

சவுதியா ஏர்லைன்ஸ் உலகின் நான்கு கண்டங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த மாதத்தில் மொத்தம் 16,133 விமானங்களை இயக்கியதில், விமானத்தின் வருகை நேரம் 88.22 சதவிகிதமும், புறப்படும் நேரம் 88.73 சதவிகிதமும் சரியான திட்டமிட்டபடி இருந்ததால் முதலிடத்தை பிடித்துள்ளது.

13 thoughts on “உலக தர வரிசையில் சவுதி ஏர்லைன்ஸ் முதலிடம்..!”

Leave a Comment