நேபாள பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு..!

காத்மாண்டு,இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இருந்து 43 பேர் பஸ்சில் நேபாளத்திற்கு 10 நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்றனர். நேபாளத்தின் பொக்காராவில் இருந்து நேற்று காலை காத்மாண்டு நோக்கி பஸ் சென்றுகொண்டிருந்தது. தனாஹன் மாவட்டத்தில் மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகே சென்றுகொண்டிருந்த பஸ், எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்நிலையில், ஆற்றில் கவிழ்ந்து பஸ் விபத்துக்குள்ளான சம்பவத்தில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 25 பேர் உயிரிழந்தனர். இதனால், இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்டமாக, உயிரிழந்த 24 சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் நாளை நாசிக்கிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மராட்டிய அரசு தெரிவித்துள்ளது

4 thoughts on “நேபாள பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு..!”

  1. Рекомендую: https://remont-avtomagnitol-wire.ru/. Если вам нужно качественное обслуживание и настройка автоэлектроники, обязательно посетите [url=https://remont-avtomagnitol-wire.ru/]https://remont-avtomagnitol-wire.ru/[/url]. На сайте представлены услуги по ремонту и настройке магнитол, установка автоакустики и диагностика электрооборудования.

    Reply

Leave a Comment

Exit mobile version