பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 100 பேர் பலி

போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியாவில் உள்ள கிராமத்தில் அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.

பப்புவா நியூ கினியா நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியின் 600 கி.மீ., தொலைவில் உள்ள காகாலம் என்ற கிராமத்தில் இன்று( மே 24) அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதில் கிராம மக்கள் பலர் சிக்கினர். உடனடியாக அப்பகுதியினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 100 பேர் உயிரிழந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் கூறினாலும், அதிகாரிகள் இன்னும் இதனை உறுதிப்படுத்தவில்லை.

1 thought on “பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 100 பேர் பலி”

Leave a Comment

Exit mobile version