ஜப்பானில் அடுத்த ஷாக்.. தீப்பற்றி எரிந்த பயணிகள் விமானம்! நல்வாய்ப்பாக 379 பணிகள் உயிர் தப்பினர்..

ஜப்பானில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 379 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.

ஜப்பான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று சற்று நேரத்திற்கு முன்பு டோக்கியோவின் விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்கிறது. ஆனால் இறங்கிய சில நொடிகளில் பயங்கரமாக தீப்பிடித்துள்ளது. தரையிறங்கும்போது மற்ற விமானத்துடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஜேஏஎல் 516 என்ற விமானம் ஹொக்கைடோவில் இருந்து 379 பயணிகளுடன் புறப்பட்டிருக்கிறது. இது டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்தில் சிக்கியுள்ளது. அதாவது இந்த விமானம் தரையிறங்கும் ஓடுபாதையில் அந்நாட்டின் கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று குறுக்கே நிறுத்தப்பட்டிருந்திருக்கிறது. எனவே இதில் மோதி இரண்டு விமானங்களும் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்திருக்கின்றன.

2 thoughts on “ஜப்பானில் அடுத்த ஷாக்.. தீப்பற்றி எரிந்த பயணிகள் விமானம்! நல்வாய்ப்பாக 379 பணிகள் உயிர் தப்பினர்..”

Leave a Comment

Exit mobile version