இந்த ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற சவுதி அரேபியா வந்துள்ள ஹாஜிகள் அனைவரும் இன்று மாலைக்குள் மினா பகுதியை வந்தடைகின்றனர். ஹஜ் கடமையின் கிரியைகள் இன்று முதல் துவங்குகின்றன. ஹாஜிகள் அனைவரும் இன்று மினாவில் தங்குவார்கள்.
இந்த ஆண்டு 25 லட்சம் பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள். இன்று நள்ளிரவுக்குப் பிறகு மக்கள் அரஃபா மைதானத்தை நோக்கி செல்லத் துவங்குவார்கள். நாளைய தினம் அரஃபா நாளாகும். அரஃபாவில் உள்ள நமிரா மஸ்ஜிதில் நாளைய தினம் அரஃபா பேருரையை ஷேக் மாஹிர் பின் ஹமது அல் முஐகிலி அவர்கள் நடத்த உள்ளார்கள். அரஃபா வராதவர்களுக்கு ஹஜ் செய்த பலன் கிடைக்காது என்பதால் நோயாளிகள் உட்பட அனைவரும் அங்கு அழைத்து வரப்படுவார்கள்.