இஸ்ரேல் – ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 42 ஆயிரமாக உயர்வு
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் பாலஸ்தீனத்தின் காசா முனையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் தற்போதுவரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 42 ஆயிரத்து 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 97 ஆயிரத்து 720 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை, உயிரிழப்பு, காயம் தொடர்பான தரவுகள் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் கீழ் செயல்பட்டுவரும் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
7 comments