போர்ப்ஸ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்த இந்தியப் பெண்மணி…!

லேண்ட்மார்க் நிறுவனத்தின் சிஇஓ ரேணுகா ஜக்தியானி. இந்த நிறுவனத்தை அவரது கணவர் மிக்கி ஜக்தியாணி தொடங்கினார்.2023 மே மாதம் கணவர் இறந்த பிறகு சி.இ.ஓ. பதவிக்கு வந்தார் ரேணுகா. தற்போது இந்த நிறுவனத்தில் தற்போது 50,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் ரேணுகா ஜக்தியானி இடம்பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.மேலும், போர்ப்ஸ் பட்டியலில் இந்தாண்டு இந்தியாவில் இருந்து மேலும் 25 பேர் கோடீஸ்வரர்கள் ஆக இணைந்துள்ளனர்.

ரேணுகா ஜக்தியானி 2007-ம் ஆண்டு ஆசியாவின் சிறந்த பெண் தொழிலதிபர் விருது பெற்றார். 2012-ல் அரபு நாடுகளின் தொழில்கூட்டமைப்பின் சிறந்த பெண் தொழிலதிபர் விருதையும் பெற்ற அவர், 2014-ல் உலக தொழில்முனைவோர் அமைப்பின் சிறந்த தொழில்முனைவோர் விருதையும் பெற்றுள்ளார்.

Leave a Comment

Exit mobile version