அமெரிக்காவை தாக்கிய சூறாவளி : ஆயிரக்கணக்கானோருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு..
அமரிக்காவின் டென்னசி மாநிலத்தை சனிக்கிழமையன்று சூறாவளி ஏற்பட்டள்ளதாகவும் பலர் பலியாகியதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவை தாக்கிய சூறாவளி
அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தை சூறாவளி புயல் தாக்கியுள்ளது. இதனால் பலத்த மழையும் ஏராளமான வீடுகள், வாகனங்கள் சேதமடைந்துள்ளன.வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து, மரங்கள் மற்றும் மின் கம்புகள் சரிந்து விழுந்துள்ளது.
இதில் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 23 பேர் காயமடைந்துள்ளார்கள். அவர்கள் மீட்டெடுக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Nashville வடக்கே சுமார் 9 மைல் தொலைவில் தேவாலயம் இடிந்து விழுந்ததில் 13 பேர் காயமடைந்தனர்.
மேலும் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு, மக்கள் வெளியேற முடியாமல் இருகிறார்கள். இவர்களை மீட்டெடுப்பதற்காக மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2 comments