ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ஈஎஸ்ஏ) தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நேற்று ஒரு செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்டது. அதில், சூரியனின் ஒளி பூமியின் மேற்பரப்பில் சரி பாதியாக படுவது தெளிவாக பதிவாகி உள்ளது. ‘ஈக்வினாக்ஸ்’ என்பது சூரியன் நேரடியாக பூமத்திய ரேகைக்கு மேல் தோன்றுவதால், பகல், இரவு சம அளவு ஏற்படும்.
இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து ஈஎஸ்ஏ கூறும்போது, ‘‘குளிர்காலம் வருகிறது. பகல் இரவு பாதியாக இன்று பிரிந்தது. இந்த செயற்கைக்கோள் படம்காலை 09.00 மணிக்கு எடுக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்பேஸ்.காம் இணையதளத்தில், ‘‘பூமியின் வடக்கு அரைகோள பகுதியில் இலையுதிர் காலம் தொடங்கியது. தெற்கு அரை கோளத்தில் வசந்த காலம் தொடங்கியது. தற்போது சூரியன் தென் திசையில் பயணிக்கிறது’’ என்றுதெரிவித்துள்ளது. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Your article helped me a lot, is there any more related content? Thanks!