ட்விட்டர் பயனாளர்களிடம் மாத கட்டணம் வசூல்.. எலான் மஸ்க் முடிவு

உலக அளவில் பல கோடி பேர் பயன்டுத்தி வரும் சமூக வலைதளமாக ட்விட்டர் விளங்கி வருகிறது. பல ஆண்டுகளாக நன்றாக இயங்கிக் கொண்டிருந்த ட்விட்டர், உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் கைக்கு எப்போது சென்றதோ அப்பொழுது முதலே பாடாய் பட்டு வருகிறது.தனது கட்டுப்பாட்டுக்கு ட்விட்டர் வந்த உடனேயே, நூற்றுக்கணக்கான பணியாளர்களை வேலையில் இருந்து அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க்.

அதன் பிறகு, ட்விட்டரில் இயங்கும் பிரபலங்களுக்கு வழங்கப்படும் புளூ டிக்குக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என எலான் அதிரடியாக அறிவித்தார். இது பெரும் சர்ச்சையானதை அடுத்து, இந்த அறிவிப்பை திரும்பப் பெற்றார். இதனைத் தொடர்ந்து, சிறிது காலம் அமைதியாக இருந்த எலான், ட்விட்டரின் அடையாளமான குருவியை பறக்கவிட்டு நாயை கொண்டு வந்தார். இப்படி அடுத்தடுத்து எலான் மஸ்க் எடுத்த முடிவால், ட்விட்டர் பயனாளர்கள் குழம்பி வந்த நிலையில் திடீரென ட்விட்டர் என்ற பெயரையே X (எக்ஸ்) என்று மாற்றினார்.

சரி, போனால் போகட்டும் என நெட்டிசன்கள் இருந்த நிலையில், தற்போது மற்றொரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார் எலான் மஸ்க். அதாவது, X வலைதளத்தை (ட்விட்டர் தான்) பயன்படுத்தும் பயனாளர்களிடம் இருந்து மாதந்தோறும் கட்டணம் வசூலிக்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். விரைவில் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி கட்டணம் செலுத்தாதவர்கள் X வலைதளத்தை பயன்படுத்த முடியாது.

Leave a Comment

Exit mobile version