சவூதி: அரஃபா திடலில் இன்று நடைபெற இருக்கின்ற ஜும்மா குத்பா தமிழ் உள்பட 14 மொழிகளில் மொழிபெயர்பு செய்யப்பட இருக்கின்றது.

புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றுவதற்காக உலகெங்கிலும் வாழக்கூடிய முஸ்லிம்கள் பலர் இவ்வாண்டு சவூதி அரேபியாவிற்க்கு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஹாஜிகள் ஒன்றுக்கூடும் அரஃபா தினமான இன்று, பல நாடுகளில் இருந்து, பல மொழிகள் பேசக்கூடிய மக்கள் அரஃபா திடலில் ஒன்றுகூடியுள்ளனர். மேலும் இன்று ஜும்மாஹ்வுடைய தினம் என்பதால் இன்று நடைபெற இருக்கின்ற ஜும்மாஹ் குத்பா 14 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யபட இருக்கின்றது.

புதிதாக சேர்க்கப்பட்ட நான்கு மொழிகளில் தமிழும் அடங்கும்,

ஜனாதிபதி ஷேக் சுதைஸின் வழிகாட்டுதலின் பேரில், அரபாத் குத்பா 4 புதிய மொழிகளைச் சேர்த்த பிறகு மொத்தம் இந்த ஆண்டு 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப்படும்: ஆங்கிலம், பிரஞ்சு, மலாய், உருது, பாரசீகம், ரஷ்யன், சீனம், பெங்காலி, துருக்கியம், ஹௌசா இந்த ஆண்டு சேர்க்கப்பட்ட புதிய மொழிகள்: ஸ்பானிஷ், ஹிந்தி, தமிழ், சுவாஹிலி

Leave a Comment

Exit mobile version