ஊதியத்துடன் விவாகரத்து விடுப்பு..!ஊழியர்களுக்கு சலுகையை வாரி வழங்கும் பெரு நிறுவனங்கள்

ஊழியர்களின் விவாகரத்து காலங்களில் ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் முறையை சில நிறுவனங்கள் அமுல்படுத்த தொடங்கியுள்ளனர்.

விவாகரத்து விடுப்பு

பொதுவாக திருமண விடுப்பு, பேறுகால விடுப்பு போன்ற விடுமுறைகளை நாம் கேள்விப்பட்டு இருப்போம், ஆனால் சமீபத்தில் தங்கள் ஊழியர்களின் விவாகரத்து காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை சில நிறுவனங்கள் வழங்க தொடங்கியுள்ளன.

பொதுவாகவே ஊழியர்கள் தங்களது விவாகரத்து காலங்களில் மிகுந்த மன அழுத்தங்கள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர், இத்தகைய காலங்களில் அவர்களால் வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது.

எனவே இத்தகைய விவாகரத்து காலங்களில் ஊழியர்கள் தங்களில் அழுத்தங்களில் இருந்து மீண்டு வரவும், சிக்கல்களை சரி செய்து கொள்வதற்காகவும் சில நிறுவனங்கள் பல்வேறு புதிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளன.

உலகளவில் சமீப காலமாக விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில் நிறுவனங்கள் இத்தகைய நடைமுறைகளில் களமிறங்கியுள்ளன.

நிறுவனங்கள் வழங்கும் பயன்கள்

சில நிறுவனங்கள் விவாகரத்து நடைமுறையில் உள்ள தங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குகின்றன.

23-64be694c07dd5 ஊதியத்துடன் விவாகரத்து விடுப்பு..!ஊழியர்களுக்கு சலுகையை வாரி வழங்கும் பெரு நிறுவனங்கள்

மேலும் ஊழியர்களின் சட்ட நடைமுறைகளுக்கு ஏற்றவாறு அவர்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தி தருவது. இக்கட்டான நேரங்களில் மனநல ஆலோசனைகளை வழங்குவது போன்றவற்றை மேற்கொள்கின்றன.

அத்துடன் விவாகரத்து செய்வது என்று முடிவு செய்து விட்ட தம்பதிகள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு கவனிப்பது என்பதற்கான சட்ட மற்றும் மனநல அறிவுறுத்தல்களையும் சில நிறுவனங்கள் வழங்க தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

23-64be694ba2f88 ஊதியத்துடன் விவாகரத்து விடுப்பு..!ஊழியர்களுக்கு சலுகையை வாரி வழங்கும் பெரு நிறுவனங்கள்

தற்போதைக்கு இந்த நடைமுறைகளை அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் நிறுவனங்கள் மட்டும் இந்த விவாகரத்து பலன்களை அறிவித்துள்ளன. 

Leave a Comment