ஈராக்: திருமணத்தில் பயங்கர தீ விபத்து: 100 பேர் பலி; 150 பேர் படுகாயம்- உயிரிழப்பு உயரும் அச்சம்!

ஈராக்கின் நிவேனா மாகாணத்தில் ஹம்தானியா என்ற இடத்தில் கிறிஸ்தவர்கள் குடும்பத்தில் திருமணம் நடைபெற்றது. இத்திருமண நிகழ்ச்சியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ சிறிது நேரத்திலேயே ஒட்டுமொத்த அரங்கம் முழுவதும் பரவியது. இதனால் அரங்கத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் தீ விபத்தில் சிக்கினர். 100 பேர் சம்பவ இடத்திலேயே கருகி மாண்டனர்.

இத்தீவிபத்தில் சிக்கி படுகாயமடைந்த 150 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 thoughts on “ஈராக்: திருமணத்தில் பயங்கர தீ விபத்து: 100 பேர் பலி; 150 பேர் படுகாயம்- உயிரிழப்பு உயரும் அச்சம்!”

Leave a Comment

Exit mobile version