அழகாக வடிவமைக்கப்பட்ட கனடாவின் புதிய பாஸ்போர்ட்:முகப்பில் இருப்பது பழைய பாஸ்போர்ட்,புதிய பாஸ்போர்ட் உள்ளே!!

‘உலகின் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட’ பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியது கனடா.

புதிய கனேடிய கடவுச்சீட்டை குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) வெளிப்படுத்தியுள்ளது.

Passport Canada அதன் ட்விட்டர் பக்கத்தில், மே 10-ஆம் திகதி கனடாவின் புதிய பாஸ்போர்ட் வடிவமைப்புகளை வீடியோவாக வெளியிட்டது.

அதில், “இன்று கனடாவின் புதிய பாஸ்ப்போர்ட்டை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.

இதில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கனடாவின் பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் நான்கு பருவங்களில் உள்ள மக்களை முன்னிலைப்படுத்தும் புத்தம் புதிய கலைப்படைப்பு ஆகியவை அடங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, சனிக்கிழமை பதிவிட்ட ட்வீட்டில், மே 1 முதல் 7-ஆம் திகை வரை 68,101 புதிய பாஸ்ப்போர்ட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக Passport Canada தெரிவித்துள்ளது.

Leave a Comment

Exit mobile version