அமீரகத்தில் புழக்கத்திற்கு வந்துள்ள புதிய 500 திர்ஹம் நோட்டு…

ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கியானது புதிய 500 திர்ஹம் நோட்டை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள 500 திர்ஹம் போன்றே அதே நீலநிறத்தில் எளிதாக அடையாளம் காணும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய பாலிமர் நோட்டு இன்று (நவம்பர் 30) முதல் புழக்கத்திற்கு வருகிறது.

புதிய திர்ஹம் நோட்டில் இடம்பெற்றுள்ள வடிவமைப்புகள் அமீரகத்தின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அடையாளங்கள் மற்றும் நிலைத்தன்மையின் தனித்துவமான மாதிரிகள் உட்பட நிலையான வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன என கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, நோட்டின் முன்புறத்தில் எக்ஸ்போ சிட்டி துபாயில் உள்ள டெர்ரா சஸ்டைனபிலிட்டி பெவிலியனின் கம்பீரமான கட்டிடக்கலையின் படமும், பின்புறத்தில், எமிரேட்ஸ் டவர்ஸ், வலது பக்கம் புர்ஜ் கலீஃபா போன்ற ஐகானிக் இடங்களின் படங்களும் இடம்பெற்றுள்ளது.

முன்புறத்தில் உள்ள வடிவமைப்புகள், மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் வகுத்த கொள்கைகளில் வேரூன்றிய ஒரு நிலையான எதிர்காலத்திற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுதிப்பாட்டின் சான்றாகும். பின்புறம் துபாயில் உள்ள மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் வடிவமைப்பை எடுத்துக்காட்டுகிறது, இது கடந்த காலத்தை கட்டிடக்கலை மற்றும் பொறியியலை அற்புதமாக எதிர்காலத்துடன் இணைக்கிறது.

அமீரகத்தின் நிலைத்தன்மைக்கான முயற்சியை கருத்தில் கொண்டு, CBUAE இந்த நோட்டை உருவாக்க பாலிமர் பொருளைத் தேர்ந்தெடுத்துள்ளது. புதிய நோட்டு பாரம்பரிய திர்ஹம் நோட்டுகளை விட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மடங்கு நீடிக்கும் என்றும், மேலும் முழுமையாக மறுசுழற்சி செய்யக்கூடியது மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை கணிசமாக குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இந்த நோட்டில் KINEGRAM COLORSஎனப்படும் பல வண்ண பாதுகாப்பு சிப் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய கிழக்கில் இந்த வகையான மிகப்பெரிய ஃபாயில் ஸ்ட்ரிப்ஸை திர்ஹம் நோட்டுகளில் பயன்படுத்திய முதல் நாடாக அமீரகத்தை நிலைநிறுத்துகிறது.

இந்த தொழில்நுட்பங்கள் முன்பு கள்ள நோட்டுகளை ஒழிக்க, 1,000 திர்ஹம் ரூபாய் நோட்டின் புதிய பதிப்பில் பயன்படுத்தப்பட்டன, இந்த தொழில்நுடபம் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பகுதிகளில் முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

8 thoughts on “அமீரகத்தில் புழக்கத்திற்கு வந்துள்ள புதிய 500 திர்ஹம் நோட்டு…”

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

    Reply

Leave a Comment

Exit mobile version