இந்த 11 உணவுகள் போதும்… எப்பேர்ப்பட்ட சூட்டு உடம்பையும் கூலாக்கிடும்…

உடல் சூடு என்பது கோடை காலத்தில் மட்டும் வரும் பிரச்சினை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் போதிய அளவு நீர்ச்சத்தும் உடலின் தட்ப வெப்ப நிலையை சீராக வைத்திருக்கும் உணவுமுறை, வாழ்க்கை முறையைப் பின்பற்றாத போது எல்லா பருவத்திலும் உடல் சூடு பிரச்சினை உண்டாகும. இந்த உடல் சூட்டைச் சீராக்கி சரியான அளவில் பராமரிப்பதில் உணவுக்கு முக்கிய இடமுண்டு. அப்படி உடல் சூட்டை தணித்து சமநிலையில் வைத்திருக்க உதவி செய்யும் உணவுகள் சிலவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.

குளிர்காலத்தில் வெளிப்புற தட்ப வெப்பநிலை மற்றும் குளிரைத் தாங்க இயற்கையாகவே நம்முடைய சூடாக மாறும். அதிக வெப்பநிலையை வெளிப்படுத்தும். அதனால் எப்போதும் தகவமைப்புக்கு ஏற்றவாறு சீராக உடலின் வெப்பநிலையை பராமரிப்பது மிக அவசியம்.

​ஹைபர்தெர்மியா

உடலின் வெப்பநிலை சீராக இல்லாத நிலையை ஹைபர்தெர்மியா என்று குறிப்பிடுவார்கள். இது பெரும்பாலும் சூரியக் கதிர்வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது தான் உண்டாகிறது.

அதையடுத்து இந்த ஹைபர்தெர்மியா உண்டாவதற்கு மிக முக்கியக் காரணமாக நீர்ச்சத்து குறைபாடு இருக்கிறது. இந்த நீர்ச்சத்து குறைபாடு வெயில் காலம் மட்டுமல்ல, உடலுக்குப் போதிய தண்ணீர் குடிக்காத போதும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலும் கூட ஏற்படும்.

​உடல் சூட்டைக் குறைக்கும் தண்ணீர்

உடல் சூட்டைத் தணிப்பதில் முக்கியமான பங்கு தண்ணீருக்குத் தான் இருக்கிறது. சரியான உடல் வெப்பநிலையை பராமரிக்க சிறந்த வழி தொடர்ந்து ஹைட்ரேட் செய்வதாகும்.

உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கவும் உடல்சூட்டைக் குறைக்கவும் தினமும் 2.7 முதல் 3.7 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

​உடல் சூட்டைக் குறைக்கும் தர்பூசணி

தர்பூசணி அதிக அளவு தண்ணீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. கிட்டதட்ட வாட்டர்மெலனில் 90 சதவீதம் நீர்ச்சத்து இருக்கிறது.

அதோடு உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஆன்டி – ஆக்சிடண்ட்டுகளும் இதில் அதிகம்.

​உடல் சூட்டை தணிக்கும் வெங்காயம்

வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமின்றி அதிகப்படியான உடல் வெப்பத்தையும் தணிக்கும். உடலையும் பாதுகாக்கும்.

குறிப்பாக பருவ காலங்களில் உண்டாகும் நோய்த் தொற்றுக்களைக் குறைக்க உதவி செய்யவும் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யவும் வெங்காயம் உதவுகிறது.

​உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய்

தர்பூசணியைப் போலவே, வெள்ளரிக்காயும் அதிக நீர்ச்சத்து கொண்ட காய்கறிகளில் ஒன்றாகும். இதில் அதிகப்படியான நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. அதனால் உடல் சூட்டினால் உண்டாகும் பக்க விளைவுகளும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளும் தீரும்.

தினமும் உணவுக்கு முன் ஒரு கப் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு அதிகமாகாமல் சீராகவும் இருக்கும். உடலின் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

​உடல் சூட்டைக் குறைக்கும் தயிர் மற்றும் மோர்

உடல் வெப்பத்தைத் தணிக்கும் உணவுகளில் முக்கியமானது தயிரும் மோரும்.
இவற்றில் அதிக புரதச்சத்தும் இருக்கிறது.

புரதங்கள் நிறைந்துள்ள இறைச்சி, சிக்கன் ஆகியவை உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். அதற்கு பதிலாக தயிரில் அதிக புரதச்சத்தும் உள்ளது. இது உடல் சூட்டை தணிக்க உதவி செய்யும்.

​உடல் சூட்டைக் குறைக்கும் இளநீர்

உடலை அதிக நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அதற்கு எப்போதும் தண்ணீரை மட்டுமே குடித்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் உடலைக் குளிர்ச்சியாக்க இளநீரைக் குடிக்கலாம்.

இளநீரில் அதிகமாக எலக்ட்ரோலைட்கள் இருப்பதால் இது உடலுக்குச் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் கொடுக்கும்.

இதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால் பருவ கால மாற்றங்களால் ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதோடு உடல் சூட்டையும் தணிக்கும்.

​உடல் சூட்டைக் குறைக்கும் புதினா

புதினா இலைகள் உடலுக்கு குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தரும். இதிலுள்ள மெந்தால் சருமம் மற்றும் உடல் முழுவதையும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கச் செய்யும்.

பழச்சாறுகள், லெமன் ஜூஸ், டீ போன்றவற்றில் புதினாவைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கச் செய்யும்.

​உடல் சூட்டைக் குறைக்கும் கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் என்றாலே அதிக ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்தது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது என்று நமக்குத் தெரியும். வாரத்தில் இரண்டு நாட்கள் கற்றாழை ஜூஸைக் குடித்து வரலாம்.

இது தவிர, கற்றாழை அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. சருமம், தலைமுடி உடல் ஆகிய எல்லா வகையான ஆரோக்கியத்துக்கும் உதவி செய்யும்.

​உடல் சூட்டைக் குறைக்கும் பச்சை இலை காய்கறிகள்

கீரை, ப்ரோக்கோலி, காலிஃபிளவர், கீரை, முட்டைக்கோஸ் போன்ற இலைவடிவ காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. இது உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்வதோடு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தையும் கொடுக்கும்.

உடலில் ஏற்படும் வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்தி சீரான நிலையில் வைத்திருக்க உதவி செய்யும்.

​உடல் சூட்டைக் குறைக்கும் சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். அதோடு வைட்டமின் சி – யும் அதிகமாக இருக்கும் என்பதால் இவை இரண்டும் பருவ கால மாற்றங்களுக்கு ஏற்ப உடலின் தகவமைப்பு சீராக்கும்.

அதனால் உடல் சூட்டால் அவதிப்படுகிறவர்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, எலுமிச்சை, திராட்சைப்பழம் என தினம் ஒரு சிட்ரஸ் பழத்தை சேர்த்துக் கொள்வது நல்லது.

​உடல் சூட்டைக் குறைக்கும் அவகேடோ

ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளதால், உங்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்த ஒமேகா 3 – யும் சேர்ந்தே கிடைக்கும்.சாச்சுரேட்டட் கொழுப்புகள் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை உண்டாக்கும். ஆனால் அவகேடோ உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்க உதவி செய்யும். மற்ற உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்ளவும் உதவி செய்யும்.

11 thoughts on “இந்த 11 உணவுகள் போதும்… எப்பேர்ப்பட்ட சூட்டு உடம்பையும் கூலாக்கிடும்…”

Leave a Comment