கெய்மி புயலால் கனமழை: சீனாவில் 6 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

தைவானில் உருவான கெய்மி புயலால் அங்கு 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த புயல் சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்படி சீனாவின் புஜியான் மாகாணத்தில் 118 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்தது. அப்போது அங்கு மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சீனாவின் 12 நகரங்களில் மழை 40 சென்டி மீட்டருக்கும் அதிகமாக பதிவானது.

இதன் காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் சுமார் 6 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களை மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர். இதற்காக அங்கு பல தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

Leave a Comment

Exit mobile version