நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா், கட்டுநா் காலிப் பணியிடங்களை டிசம்பருக்குள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் **தகுதி:**விற்பனையாளர்கள் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர்கள் பதவிக்கு 10ம் வகுப்பத் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மாநிலம் முழுவதும் 3280 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
**விண்ணப்பிக்கும் முறை:**அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய (district recruitment bureau-2024) இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https://drbmadurai.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே 2024 நவம்பர் 7 ஆம் தேதி மாலை 5.45 வரை விண்ணப்பிக்கலாம்.
**தேர்வு முறை :**விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பதாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இனச்சுழற்சி அடிப்படையிலும், தொடர்புடைய இதர அரசாணைகள் மற்றும் சட்டப் பிரிவுகளின் கீழ் வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர். மேலும், தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
இதையும் வாசிக்க : ரூ.39,000 சம்பளம்..டிகிரி தகுதி போதும்.. விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி
விண்ணப்பக் **கட்டணம்:**விற்பனையாளர் பதவிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.150/- மற்றும் கட்டுநர் (Packers) விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- ஆகும்.ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
**சம்பளம்:**சேல்ஸ்மேன் பதவிக்கு ரூ. 8,600 இருந்து ரூ. 29,000 வரை மற்றும்Packer பதவிகளுக்கு ரூ. 7,800 இருந்து ரூ. 26,000 வரை மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு 40 சேல்ஸ்மேன் காலி பணியிடங்களும், 11 பேக்கர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.