UAE: சுற்று பயணமாக ஓமான் சென்ற துபாய் வாழ் இந்திய குடும்பத்தை சார்ந்த தந்தை மற்றும் மகன் கடலில் மூழ்கி பலி, மகளை தேடும் பணி தீவிரம்..

துபாயில் வசிக்கும் 6 வயது மகன் ஓமான் கடற்கரையில் மூழ்கி பலி, 9 வயது மகளை தேடும் பணி தீவிரம்

துபாயில் தனியார் கம்பெனியில் சேல்ஸ் மேனாக பணிபுரியும் மகாராஷ்டிராவை சேர்ந்த ஷஷிகாந்த் அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தைகள் ஸ்ரேயா (9) மற்றும் ஸ்ரேயாஸ் (6) ஆகியோர் ஒரு நாள் பயணத்திற்காக ஞாயிற்றுக்கிழமை அண்டை நாடான ஓமனுக்குச் சென்றதாக ஷஷிகாந்தின் சகோதரர் தெரிவித்தார்.

முதற்கட்ட தகவலின்படி, ஸ்ரேயா மற்றும் ஸ்ரேயாஸ் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது பலத்த அலையால் அடித்துச் செல்லப்பட்டனர், அப்பொழுது அவர்களை காப்பாற்ற முயன்ற சஷிகாந்தும் நீரில் மூழ்கி இறந்தார்.

ஷ்ஷிகாந்த் மற்றும் அவரது மகனின் உடலுகள் மீட்கப்பட்ட நிலையில், சிறுமியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக சஷிகாந்தின் சகோதரர் கூறினார். மேலும், காணாமல் போன குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருவதாக ராயல் ஓமன் காவல்துறையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

FB_IMG_1657878780836 UAE: சுற்று பயணமாக ஓமான் சென்ற துபாய் வாழ் இந்திய குடும்பத்தை சார்ந்த தந்தை மற்றும் மகன் கடலில் மூழ்கி பலி,  மகளை தேடும் பணி தீவிரம்..
images courtesy Royal Oman Police
FB_IMG_1657878776794 UAE: சுற்று பயணமாக ஓமான் சென்ற துபாய் வாழ் இந்திய குடும்பத்தை சார்ந்த தந்தை மற்றும் மகன் கடலில் மூழ்கி பலி,  மகளை தேடும் பணி தீவிரம்..
images courtesy Royal Oman Police
FB_IMG_1657878773393 UAE: சுற்று பயணமாக ஓமான் சென்ற துபாய் வாழ் இந்திய குடும்பத்தை சார்ந்த தந்தை மற்றும் மகன் கடலில் மூழ்கி பலி,  மகளை தேடும் பணி தீவிரம்..
images courtesy Royal Oman Police

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள
எங்கள் WhatsApp Groupல் (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) இணைத்து கொள்வதோடு, எங்கள் சமூக வலைதள பக்கங்களையும் follow செய்து கொள்ளுங்கள்.. 🙂

Leave a Comment